மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணைக்கிணங்க ஈரோடு மாவட்டத்தில் நியாயவிலை கடைகளில் பயோமெட்ரிக் முறையில் அத்தியாவசிய பொருள் வாங்கும் முறையை இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் கதிரவன் தொடங்கி வைத்தார்
ஈரோடு மாவட்டத்திலுள்ள 1132 நியாயவிலை கடைகளில் இன்று பயோமெட்ரிக் உபகரணம் வழங்கப்படும். அத்தியாவசிய பொருட்கள் பெற வரும் நபர்கள் கைரேகை பதிய வேண்டும். கை ரேகை பதிந்தால் மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும். கைரேகை ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் ஆதார் அட்டையில் பதிவு செய்யப்பட்டுள்ள தொலைபேசி எண் எண்ணிற்கு OTP குறுஞ்செய்தி எண் அனுப்பப்படும் அதனடிப்படையில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் . அவற்றில் ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் குடும்ப அட்டையில் பதிவு செய்யப்பட்டுள்ள கைபேசி எண்ணிற்கு ஓடிபி OTP அதாவது குறுஞ்செய்தி எண் அனுப்பப்படும் அதன் அடிப்படையில் பொருட்கள் வழங்கப்படும். இந்த மூன்று முறைகளிலும் வாடிக்கையாளருக்கு தவறும் பட்சத்தில் அலுவலர் அவர்களால் உண்மை தன்மை அறிந்து அத்தியாவசிய பொருள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கே. மணிகண்டன்
ஈரோடு மாவட்ட செய்தியாளர்
No comments:
Post a Comment