ஆலங்குளம் புதுகாலனியில் சாலை அமைத்திட கோரி CITU மாவட்ட பீடி தொழிலாளர் சங்கம் நடத்திய முறையிடும் போராட்டம் வெற்றி
ஆலங்குளம் 9வார்டு புதுகாலனியில் - 4 மாதங்களுக்கு முன்பு உடைத்து போட்ட சாலையை உடனே தார்சாலை போட வலியூறுத்தி செப்டம்பர் 9 ஆம் தேதி ஆலங்குளம் பேரூராட்சி அலுவலகம் முன்பு மாவட்ட பீடி தொழிலாளர் சங்கம் மற்றும் தெரு பொதுமக்கள் சார்பாக முறையிடும் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்த நாளில் நடந்த பேச்சு வார்த்தையில் ஒரு மாத காலத்திற்குள் சாலை அமைக்க ஏற்பாடு செய்யபடும் என ஆலங்குளம் பேரூராட்சி பொறுப்பு அலுவலரால் எழுத்து பூர்வமாக நிர்வாக கடிதத்தை மாவட்ட பீடி தொழிலாளர் சங்கத்திற்கு கொடுத்தது. அதன் அடிப்படையில் மெயின் சாலை தற்சமயம் அமைக்கபட்டு வருகிறது. அருந்தியர் உள் தெருசாலை பணிகளும் போட பட வேண்டும் என்ற கோரிகை பரிசீலினை செய்யப்பட்டு வருவதாக பொறுப்பு பேரூராட்சி அலுவலர் சாலை அமைக்கும் இடத்தில் வந்து பார்வையிட்டு விட்டு அங்கு உள்ள தெரு பொதுமக்களிடம் தெரிவித்து உள்ளார். இது மாவட்ட பீடி தொழிலாளர் சங்கம் CITU மற்றும் தெருமக்கள் நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும் என்பதை CITU சங்கத்தின் திருநெல்வேலி தென்காசி மாவட்ட குழுவின் சார்பாக போராட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் சாலை அமைத்திட முயற்சி செய்திட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றியையும், போராட்டத்தில் பங்கேற்ற அனைத்து பொதுமக்களுக்கும் பாராட்டுதலையும், வாழ்த்துக்களையும் தெரிவிக்கப்பட்டது
தென்காசி மாவட்ட செய்தியாளர்
A. கோவிந்தராஜ்
No comments:
Post a Comment