நுன் நிதி நிறுவனங்கள் அடவடித்தானமாக பெண்களிடம் வசூல் வேட்டை செய்வதை வழக்குபதிவு செய்யவலியுறுத்தி உண்ணாவிரதம் நடைப்பெற்றது
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் மைக்ரோபைனான்ஸ் நுண்நிதி நிறுவனங்கள் அடாவடிதனமான கடன் வசூல் செய்வதை கண்டித்தும். 2021 மார்ச் வரை கால அவகாசம் வழங்க கோரியும். பெண்களை இழிவாக பேசியும் தற்கொலைக்கு தூண்டும் வகையில் செயல்படும் நுண்நிதி நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தியும் ஊரடங்கு கால வட்டியை தள்ளுபடி செய்யக்கோரியும். ஜனநாயக மாதர்சங்கம் சார்பாக ஒன்றிய தலைவர் அழகுசுந்தரி தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்றது. சுமார் 150 பெண்கள் கலந்து கொண்டனர். போராட்டம் துவங்கிய அரை மணி நேரத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொன்னிவளவன். ஆய்வாளர் சந்திரசேகரன்.உள்பட 50 பேர் காவல்துறையினரால் வலுகட்டாயமாக பெண்கள் கைது செய்வது என்ற முடிவுக்கு வந்தனர். மாவட்டச்செயலாளருக்கும் காவல்துறைக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. மாவட்டகாவல் துணை கண்காணிப்பாளர் நீங்கள் போராட்டம் நடத்த அனுமதி கிடையாது. போராட்டம் நடத்துவது சட்டவிரோதமான செயல் என்றும் உங்களை கைது செய்வோம் என்று கூறியதால் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. போராட்டம் நடைபெறும் இடத்தில் காவல்துறை வாகனத்தை இடையூறாக நிறுத்தி பொதுமக்கள் கவனத்திற்கு செல்லவிடாமல் தடுத்தனர். நமது அமைப்பிலுள்ளவர்களும் போராட்டத்தில் உறுதியாக நின்றனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை கைது செய்தனர். சுமார் 11 மணியளவில் வட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இக்கூட்டத்தில் மாவட்டகாவல்துணை கண்காணிப்பாளர். காவல்ஆய்வாளர். சுரண்டை காவல்துறை ஆய்வாளர். மற்றும் மைக்ரோபைனான்ஸ் நிறுவனங்களின் பொறுப்பாளர்கள். அதோடு மாதர்சங்க தலைவர்கள் தங்கம்.மேனகா. மல்லிகா.சுந்தரி. கதிர்செல்வி.சசிகலா.வசந்தி.சமுத்திரகனி. சி.பி.எம். செயலாளர் குணசீலன். பீடிசங்க மாவட்ட நிர்வாகி மாரியப்பன் உள்பட கலந்து கொண்டனர். பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. முடிந்தவுடன் அடுத்த பதிவை தொடர்கிறோம்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் A.கோவிந்தராஜ்
No comments:
Post a Comment