தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில்  மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் கோரிக்கை மனு

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில்  மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் கோரிக்கை மனு..



தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா மாயமான்குறிச்சி ஊராட்சி குருவன்கோட்டை கிராமத்தில் அருந்ததியர் சமுதாயமக்கள் பலதலைமுறையாக வழிபட்டுவரும் குலதெய்வகோயில் அதனை சுற்றி உள்ள கோவில் நிலம் (சுமார் 10சென்ட் ) அருந்ததியர் மக்கள்பல தலைமுறையாக கோயில் நிகழ்ச்சிகளையும் விஷேச நாட்களிலும் பயன்படுத்தி வந்தனர்.   தற்போது மாயமான்குறிச்சி ஊராட்சி செயலாளர் S.தங்கப்பாண்டியன் கோவில் இடத்தில் மினிடேங்க் மற்றும் கோவிலுக்கு மேற்புறம் தெருவிற்கு மேல்பகுதியிலுள்ள வீடுகளிலிருந்து வரும்கழிவு தண்ணீரை நிலத்தடி சேமிப்பிற்காக மழைநீர் சேகரிப்பு கட்ட நடவடிக்கை எடுத்துவருகிறார்.    அதனை கோவில் இடத்தை ஒட்டியுள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் அமைத்திட கோரியும் மேலும் அருந்ததியர்மக்களை கேவலமாகவும் தகாத வார்த்தைகளால் பேசியதற்கு நடவடிக்கை எடுக்க  கோரியும் தென்காசி மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது.   தீண்டாமை ஒழிப்பு முன்னணி செயலாளர் பாலு,அ.இ. விவசாயசங்க தாலுகா செயலாளர் வெற்றிவேல்,பீடிசங்க தாலுகா தலைவர்மாரியப்பன் தமிழ்புலிகள் கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் குற்றாலம் குமார் மற்றும் ஊர்பொதுமக்கள்  கலந்து கொண்டனர்.


 


தென்காசி மாவட்ட செய்தியாளர் A.கோவிந்தராஜ்


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...