தென்காசி மாவட்டத்தில் தவறான சிகிச்சையை கண்டித்து தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

தென்காசி மாவட்டத்தில் தவறான சிகிச்சையை கண்டித்து தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு..



தென்காசி - 18 தென்காசி மாவட்டம்  உடையார் தெருவை சேர்ந்தவர் செல்வம் தந்தை பெயர் அமல்ராஜ்.. இவர் கடந்த சில நாட்களாக மலச்சிக்கல் காரணமாக மிகவும் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார் இதனால் சிகிச்சைக்காக தென்காசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவம் பார்க்க சென்றார்.  அங்கு மூலம் பௌத்திரம் சிகிச்சைக்குப் பதிலாக ஆசன வாயிலில் உள்ள ஒரு பகுதி சதையை கத்திரிக்கோலால் வெட்டி அகற்றி விட்டனர்   இதனால் செல்வம் அவர்கள் உட்கார்ந்தாலோ அல்லது நடந்தாலும் மலம் வெளியேறிக்கொண்டிருந்தது   இதன் காரணமாக மறுபடியும் அந்த மருத்துவரிடம் சென்று சிகிச்சை முறைகளை கேட்டு அறிந்த போது அங்குள்ள மருத்துவர் வேறொரு மருத்துவரிடம் சிகிச்சை பெற பரிந்துரை செய்தார்   அதன் பெயரில் செல்வம் வேறு தனியயர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்ற போது அங்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட தெரியவந்தது..   அங்குள்ள மருத்துவர் ஸ்கேன் செய்து பார்த்த பொழுது மலக் குழாயில் உள்ள ஒரு சதை வெட்டி எடுக்கப்பட்டது இதற்கு காரணம் என கூறியுள்ளார்   இதன் காரணமாக சிகிச்சை பலனின்றி செல்வம் பரிதாபமாக மரணம் அடைந்துவிட்டார்   இதனால் அவரது தந்தை அமல்ராஜ் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் என் மகனுக்கு தவறான சிகிச்சை செய்ததால் உயிரிழந்துவிட்டார்   மேலும் அந்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை வைத்துள்ளனர்.


 


தென்காசி மாவட்ட செய்தியாளர் A.கோவிந்தராஜ்.


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...