தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் நாம் தமிழர் கட்சி சார்பாக கோரிக்கை மனு...
தென்காசி- 18 தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் தொகுதியை சேர்ந்த நாம் தமிழர் கட்சி சார்பாக கோரிக்கை மனு ஒன்று வைக்கப்பட்டுள்ளது அதில் தெரிவிப்பது என்னவென்றால் சங்கரன்கோவில் தொகுதி மேலநீலிதநல்லூர் ஒன்றியம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி யில் தொடர்ந்து நடைபெறும் நிர்வாக முறைகேடு மற்றும் கல்வி கொள்ளை மாபியா கும்பலின் பிடியில் இருந்து மீட்பது தொடர்பாக கல்லூரியில் நடக்கும் நிர்வாக சீர்கேட்டை தடுத்து நிறுத்த விசாரணை ஆணையம் அமைக்க முறையாக விசாரணை நடத்தி கல்லூரியை அரசு முறையாக நிர்வாகம் செய்வது தொடர்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது ..சங்கரன்கோவில் தொகுதியில் செயல்பட்டு வரும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி யில் முறைகேடு நடந்து வருகிறது எனவும் அங்கு படிக்கும் மாணவர்களின் தேர்ச்சி 2 சதவீதமாகவே உள்ளது எனவும் மாணவர்களின் பெற்றோர்கள் குறை கூறியுள்ளனர் மேலும் மேலும் 20 வருடங்களாக ஆயுள் முடிந்த கட்டிடங்களை பயன்படுத்துவதாகவும் மேலும் கல்லூரியை சுற்றி உள்ள நூற்றுக்கு மேற்பட்ட பசுமை மரங்களை வெட்டி கல்லூரியின் வளத்தை கொள்ளை கொள்ளையடித்த தாகவும் மேலும் இக்கல்லூரியில் பத்து வருடமாக தேர்ச்சி வீதம் 2 சதவீதமே உள்ள தாகவும் கல்லூரி நிர்வாகம் செய்ய பதிவு எண் 78/1971 என முறைகேடாக பதிவு செய்து நிர்வாகம் செய்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு உடனே விசாரணை ஆணையம் அமைத்து உடனே அரசின் கவனத்திற்குக் கொண்டு வருமாறும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சங்கரன்கோவில் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தென்காசி ஆணையரிடம் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்ட செய்தியாளர்
A. கோவிந்தராஜ்.
No comments:
Post a Comment