தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியஅலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பாக 25/08/2020 முதல் நடைபெற்று வரும் உள்ளிருப்பு போராட்டத்தின் தொடர்ச்சியாக 26/08/2020 புதன்கிழமை 2ம் நாள் உள்ளிருப்பு போராட்டம் காலை 10.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது . தலைமை : தோழர் பஷீர் அவர்கள், தலைமையிடத்து து.வ.வ.அ (ஊராட்சிகள்), முன்னிலை & வாழ்த்துரை : ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் ஆணையாளர் தோழர் ச.செல்வராஜ் அவர்கள் கோரிக்கை விளக்கவுரை : தோழர் சி.பழனி அவர்கள், மாநில செயற்குழு உறுப்பினர், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம், தென்காசி மாவட்டம், வாழ்த்துரை : 1 ) தோழர் பூத்துரை அவர்கள், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் வட்டக் கிளை நிர்வாகி, 2). தோழர் கா.சாந்தலெட்சுமி அவர்கள், தலைமையிடத்து து.வ.வ.அ (நிர்வாகம்), 3) தோழர் A.சிவக்குமார் அவர்கள், வட்டக் கிளை தலைவர், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி, ஆலங்குளம் . சிறப்புரை : தோழர் க.துரைசிங் அவர்கள், மாவட்ட செயலாளர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், திருநெல்வேலி & தென்காசி மாவட்டம். நன்றியுரை : தோழர் சா.அந்தோணி அவர்கள், வட்டக் கிளை செயலாளர், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம், ஆலங்குளம் வட்டக் கிளை நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
தென்காசி மாவட்ட செய்தியாளர்
A. கோவிந்தராஜ்.
No comments:
Post a Comment