தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே சி கருப்பண்ணன் தலைமையில் புதிய கட்டிட பணிகள் தொடக்கம்...
ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்ற தொகுதி உட்பட்ட கவுந்தப்யாடி வடக்கு ஆரம்ப பள்ளியில் கவுந்தப்பாடி நகர தந்தை குப்புசாமி முதலியார் குடும்பத்தின் சார்பாக ரூ 10 லட்சம் மதிப்பீட்டில் புதிய பள்ளிக் கட்டிடம் கட்டும் பணி தொடக்க விழா நடந்தது. விழாவிற்கு தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே சி கருப்பண்ணன் தலைமை தாங்கி புதிய கட்டிட பணியினை தொடங்கி வைத்தார். தொழில் அதிபர் வேலுச்சாமி முன்னிலை வகித்தார். விழாவில் கவுந்தப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் பாவா தங்கமணி, துணைத் தலைவர் தீபிகா மற்றும் கவுன்சிலர்கள், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜான், மாவட்ட எம் ஜி ஆர் மன்ற துணைத் தலைவர் சரவணன், ஞானசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கே .மணிகண்டன் ஈரோடு மாவட்டம் செய்தியாளர்.
No comments:
Post a Comment