தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் தடுப்பூசி போடப்பட்டு மாடுகளில் நோய் எதிர்ப்பு சக்தியினை கூட்டும் வகையில்  அதிகாரிகள் ஆய்வு

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் தடுப்பூசி போடப்பட்டு மாடுகளில் நோய் எதிர்ப்பு சக்தியினை கூட்டும் வகையில்  அதிகாரிகள் ஆய்வு...



கோமாரி நோய் தடுப்பூசி தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் (NADCP) கீழ் கால்நடை பராமரிப்புத் துறையால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  ஆலங்குளம் ஒன்றியத்தில் உள்ள நெட்டூர் கால்நடை மருந்தகத்திற்குட்பட்ட சுப்பையாபுரம்  கிராமத்தில் கடந்த  ஜூலை மாதம் 8 ஆம் தேதி கால்நடைகளுக்கு காதுவில்லை பொருத்தி கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது.   இன்று அங்குள்ள பசு மற்றும் எருமை மாடுகளுக்கு தடுப்பூசி  மருந்து எந்த அளவுக்கு நோய் எதிர்ப்பு சக்தியினை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை ஆய்வு செய்ய திருநெல்வேலி கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் ஜான் சுபாஷ் மற்றும் நெட்டூர் கால்நடை மருத்துவர் ராமசெல்வம்  மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் கீதா, ரமா ஆகியோர் கொண்ட குழுவினருடன்  தடுப்பூசி போடப்பட்ட  கால்நடைகளில் இரத்த மாதிரி சேகரிக்கும் பணியை மேற்கொண்டனர்.


 


தென்காசி மாவட்ட செய்தியாளர்


A. கோவிந்தராஜ்.


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...