தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த காளத்திமடத்தில் அனைவருக்கும் சிகிச்சை அளிக்கும் வகையில் முகாம்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த காளத்திமடத்தில் அனைவருக்கும் சிகிச்சை அளிக்கும் வகையில் முகாம்...



தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டாரம் காளத்திமடம்  கிராமத்தில் சமீபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பை கருத்தில் கொண்டு அந்த கிராமத்தில் அனைவருக்கும்  சிகிச்சை அளிக்கும் விதமாக மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின்பேரில் பொது சுகாதாரத் துறை சார்பாக சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. தென்காசி மாவட்ட துணை ஆட்சியர் பிரதவ்ஸ் பாத்திமா முகாவை துவக்கிவைத்தார்.


 


இம்முகாமில் ஆலங்குளம் வட்டாசியர் பட்டமுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்   இம்முகாமில் 40 வயதுக்கு மேற்பட்ட ஆண் பெண் இரு பாலருக்கும் உயர் ரத்த அழுத்த பரிசோதனை,ரத்தத்தில் சுகர் பரிசோதனை, இதயத்தில் ஆக்ஸிஜன் பரிசோதனை மற்றும் காய்ச்சல் சளி உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.


 


மேலும் அனைவருக்கும் கபசுர குடிநீர், ஆர்சனிக் ஆல்பம் மாத்திரைகள் வழங்கப்பட்டது இம்முகாமில் நெட்டூர் வட்டார மருத்துவர்கள் மருத்துவர் சக்திவேல் மருத்துவர் குத்தால ராஜ் மருத்துவர் சித்ரா மருத்துவர் சங்கீதா தெரசா மற்றும் ஆலங்குளம் மருத்துவர்கள் மருத்துவர் புஷ்பலதா ஜான், மருத்துவர் ரமேஷ் குழுவினர்கள் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர்,


 


முகாம் ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஹரிஹர சுப்பிரமணியன் சுகாதார ஆய்வாளர் கங்காதரன் கிராம சுகாதார செவிலியர் கோமதி மற்றும் ஊராட்சி செயலர் கிராம வருவாய் அலுவலர் ஆகியோர் முகாம் ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.   மேலும் முகாமின் தொடர்ச்சியாக வெங்கடேஸ்வரபுரம் கிராமத்திலும், நல்லூர் கிராமத்திலும் இதுபோன்று சிறப்பு முகாம்கள் நடத்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


 


தென்காசி மாவட்ட செய்தியாளர் A.கோவிந்தராஜ்


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...