தென்காசி மாவட்டத்தில் எலுமிச்சை பத்தும் தொழிலுக்கு ரூ10தென்காசி மாவட்டத்தில் லட்சம் வரை கடனுதவி

தென்காசி மாவட்டத்தில் எலுமிச்சை பத்தும் தொழிலுக்கு ரூ10தென்காசி மாவட்டத்தில் லட்சம் வரை கடனுதவி   ஆகஸ்ட்-13 தென்காசி - எலுமிச்சை பதப்படுத்தும் தொழிலுக்கு ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் சுந்தர் தயாளன் தகவல்...



இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:  பாரத பிரதமரால் 2020 - 2021 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட ஒன்னிறைவான இந்தியா (ஆத்மதிர்பார் பாரத் அபியான்) திட்டத்தின் கீழ் ஒரு பகுதியாக அமைப்பு சாரா உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களை வலுப்படுத்தும் விதமாக பாரத பிரதமர் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.  இத்திட்டம் 2020 - 2021 ஆம் ஆண்டு முதல் 2021 - 2025 வரை 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் மத்திய அரசின் 60 சதவீதம் மற்றும் மாநில அரசின் 40 சதவீதம் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும்.   இத்திட்டம் "ஒரு மாவட்டத்திற்கு ஒரு விளைபொருள் என்ற அணுகுமுறையில் செயல்படுத்தப்படும். இத்திட்டமானது மத்திய அமைச்சக உணவுப்பதப்படுத்தும் தொழில் துறை வழியாக, தமிழ்நாட்டில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் செயல்படுத்தப்படும். மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.


 


உணவுப்பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான இத்திட்டத்தின் மூலம் தனிநபர் அடிப்படையில், ஏற்கனவே உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு நிறுவனங்களை வலுப்படுத்துதல் அல்லது புதிய நிறுவனங்கள் தொடங்குதல், குழு அடிப்படையில் பொது உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தருதல், வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதல், தொழில் நுட்ப பயிற்சிகள் போன்ற இனங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும்..  மேலும், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், சுய உதவி குழுக்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் போன்றவைகளுக்கும் நிதி உதவி வழங்கப்படும். ஒரு மாவட்டத்திற்கு ஒரு விளைபொருள் என்ற அடிப்படையில் தென்காசி மாவட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எலுமிச்சை விளை பொருளை பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள மற்றும் ஈடுபட உள்ள சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் .   இத்திட்டத்தின் மூலம் ஒரு சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனம், தகுதியான திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 இலட்சம் வரை நிதி உதவி பெற்று பயன்பெற வாய்ப்புள்ளது. வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்தலுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். மேலும், சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு தேவைப்படும் தொழில் கடன் தொகை, வங்கி மூலம் ஏற்பாடு செய்து தரப்படும்.


 


ஆகவே, மாவட்ட அளவில் ஏற்கனவே இயங்கி வரும் சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் தென்காசி மாவட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எலுமிச்சை விளை பொருளை பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள மற்றும் ஈடுபட உள்ள நிறுவனங்கள் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைகளை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.  மேலும் விபரங்களுக்கு தென்காசி மாவட்ட வேளாண்மை துணை இயக்குநரை (வேளாண் வணிகம்) 9597634710 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.   இவ்வாறு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் சுந்தர் தயாளன் செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.


 


தென்காசி மாவட்ட  செய்தியாளார்


A. கோவிந்தராஜ்.


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...