ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கதிர்வேல் ஆய்வு மேற்கொண்டார்...
மாவட்ட ஆட்சித் தலைவர் கதிரவன் ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகள் ரூ 1.48 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குள்ளம்பாளையம், திங்களூர் பகுதியில் இன்று மாவட்ட ஆட்சியர் கதிரவன் ரூ 1.48 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்டார் , இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் கதிர்வேல் தெரிவித்ததாவது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் மூலம் கிராம வளர்ச்சிக்காக சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள், தாய்த் திட்டம் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டம்,தன்னிறைவு திட்டம், ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட திட்டம், தார் சாலைகள் திட்டம், வட்டார சமூக சேவை மையம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் கிராம வட்டார பொதுநிதி மத்திய மாநில அரசின் சாலை மேம்பாட்டு திட்டம் தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டம் தெருவிளக்கு உட்பட அடிப்படை வசதிகள் போன்ற தேவையான திட்டங்களை சிறப்பாக செயல்பட்டு வருகிறது, அந்த வகையில் இன்றைய தினம், ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஊராட்சி ஒன்றியம், குள்ளம்பாளையம் ஊராட்சி எம்ஜிஆர் நகரில் ஜல் சக்தி மிஷின் திட்டத்தின் கீழ் ரூ 68 .88இலட்சம் மதிப்பீட்டில் 701 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகளையும், திங்களூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ 40 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கிராமம் சந்தையினையும், மேலும் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் 40இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த பெண்களிடம் கேட்டறிந்து, கட்டாயம் முகவசம் அணிந்தும் சமூக இடைவெளியை பின்பற்றியும், அடிக்கடி கைகளை கழுவி தூய்மையாக வைத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின் போது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிமாலா. மோகன். உதவி பொறியாளர் அட்சயகுமார் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
கே .மணிகண்டன்
ஈரோடு மாவட்டம் செய்தியாளர்.
No comments:
Post a Comment