தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கள்ளக்குறிச்சிக்கு வருகை..
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பு பணிகள் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டவர் பின்னர் விவசாய சங்கப் பிரதிநிதிகள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், மகளிர் சுய உதவிக் குழுவினர் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார் மேலும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக, குடும்ப அட்டைதாரர்களுக்கு "விலையில்லா மறுபயன்பாட்டு முகக்கவசங்களை வழங்கினார் அதை தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் பின்னர் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் ரூபாய் 15.16 கோடி மதிப்பிலான 14 முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைத்து, ரூ.20.86 கோடி மதிப்பிலான 60 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
பா.ரவி
சிறப்பு ஆசிரியர் - தேசிய மக்களாட்சி.
No comments:
Post a Comment