கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் சமூக சேவகர்களுக்கு விருது வழங்கிய தேசிய மக்களாட்சி இயக்கம்...
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் தேசிய மக்களாட்சி இயக்கத்தினர் கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு உதவிகளை மேற்கொண்டு வந்த அரசு ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்களை பாராட்டி பாராட்டு சான்றுகள் மற்றும் விருது வழங்கி கௌரவித்தனர் இந்நிகழ்ச்சிக்கு தேசிய மக்களாட்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவி தலைமை வகித்தார், திருக்கோவிலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் மகேஷ், சங்கராபுரம் வட்டாட்சியர் நடராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை, தேசிய மக்களாட்சி இயக்கத்தை சார்ந்த வேட்டவலம் வழக்கறிஞர் மணிமாறன் மற்றும் காவல்துறையினர், மருத்துவமனை மருத்துவர், பேரூராட்சி ஊழியர்கள், தீயணைப்பு துறையினர், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கும், துப்புரவு பணியாளர்களையும் பாராட்டி சான்றிதழும் விருதும் வழங்கப்பட்டது, பங்கேற்ற அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது,
நிகழ்வின் போது முறையான சமூக இடைவெளியை பின்பற்றியும், முகக்கவசம் அணிந்தும் விழா நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பா.ரவி
சிறப்பு ஆசிரியர் - தேசிய மக்களாட்சி.
No comments:
Post a Comment