பவானி காவல் நிலையம் சூரிய மின்சக்தி உற்பத்தி மற்றும் பயன்பாட்டுக்கு மாறியது..
ஈரோடு மாவட்டம் பவானி காவல் நிலையத்தில் மின்தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் பவானி காவல் நிலையம் சூரிய மின்சக்தி உற்பத்தி மற்றும் பயன்பாட்டுக்கு மாறியுள்ளது.
மின் செலவினத்தைக் குறைக்கும் வகையில் பல முக்கிய காவல் நிலையங்களுக்கு சூரிய மின்சக்தியின் மூலம் இயங்கும் வகையில் மின் கட்டமைப்பு மாறுதல் செய்யப்பட்டுள்ளது இதன்படி பவானி காவல் நிலைத்தில் மாடியில் 5 சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின் சக்தியே சேமித்து விநியோகிக்க 4 பெரிய பேட்டரிகள் மற்றும் 2 கிலோ வாட் திறன் கொண்ட யுபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளது. இங்கு சூரிய மின் சக்தியால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் கொண்டு பவானி காவல் நிலையத்தில் 22 மின் விளக்குகள் 10 மின்விசிறிகள் கணினி சாதனங்கள் உள்பட அனைத்தும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மின்சக்தியை சேமிக்கும் வகையில் குறைந்த மின் திருநாளில் அதிக ஒளி கொடுக்கக்கூடிய புதிய எல்இடி விளக்குகள். சூப்பர் பவர் மின்விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாதம் ரூ5ஆயிரம் வரையிரம் மின்சார குறையும் என காவல் ஆய்வாளர் தேவேந்திரன் அவர்கள் தெரிவித்தார்.
மணிகண்டன்
மாவட்ட செய்தியாளர் - ஈரோடு..
No comments:
Post a Comment