கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதி ஏரிகளில் ஏற்படும் திடீர் தீ விபத்துகள் காவல்துறை ரோந்து பணிகள் இருந்தும் என்ன பயன் அடுத்த தீ விபத்து எந்த கிராம ஏரியில் ஏற்படுமோ என பொது மக்கள் அச்சம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதி ஏரிகளில் ஏற்படும் திடீர் தீ விபத்துகள் காவல்துறை ரோந்து பணிகள் இருந்தும் என்ன பயன் அடுத்த தீ விபத்து எந்த கிராம ஏரியில் ஏற்படுமோ என பொது மக்கள் அச்சம்!!



கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் காவல் நிலைய எல்லைப்பகுதியான வரகூர் கிராமத்தில் ஏரியில் கடந்த 11-06-2020 அன்று இரவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது அவை உடனடியாக தீயணைப்பு துறை மற்றும் வருவாய் துறை, வனத்துறை என அனைத்து துறைகளுடன் இணைந்து சமூக ஆர்வலர்களும் தீயை அணைக்கும் பணியினை மேற்கொண்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் சிறிது அலட்சியமாக இருந்திருந்தால் கூட ஏரியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் தீ பரவி இருக்கக்கூடும் அப்படி ஏற்பட்டிருப்பின் வனப்பகுதியில் உள்ள வன உயிரினங்கள் மற்றும் வனப்பகுதியே தீக்கிறையாகி இருக்கும்.,



அவை நடந்த இரண்டாவது வாரத்தில் அ.பாண்டலம் கிராமத்தில் மகாநாட்டு மாரியம்மன் கோவில் எதிரில் உள்ள ஏரியில் இரவு நேரத்தில் (23-06-2020) திடீர் தீ பிடித்து எறிந்தவற்றை பார்த்தவர்கள் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர் அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீ பரவுவதற்குள்ளாக அனைத்தனர். இப்படி இந்த மாதத்தில் இரண்டாவது தீ விபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது,


எப்படி திடீர் தீ விபத்துகள் ஏற்படுகிறது என்று நாம் அப்பகுதியில் விசாரித்தபோது,


அப்பகுதியினர் கூறுகையில், தற்போது கோடைகாலத்தில் பெரும்பாலும் மது பிரியர்கள் இருட்ட துவங்கியவுடன் பாட்டிலோடு ஏரி பகுதியில் இடம் பிடிக்க துவங்கிவிடுகின்றனர் அவர்கள் குடித்துவிட்டு பீடி, சிகரெட்டுகளை புகைத்து சிலர் அணைக்காமல் கூட அப்படியே வீசி செல்கின்றனர் அப்படி வீசி செல்பவர்களால் கூட இப்படி தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் அல்லது சமூக விரோதிகளின் செயலாக கூட இருக்கலாம் என தெரிவித்தனர், அதோடு அடுத்து எந்த ஏரி இப்படி தீக்கிறையாக போகிறதோ என அச்சம் தெரிவித்தனர்,


சங்கராபுரம் காவல் நிலையத்திலிருந்து அருகாமை கிராமங்களில் இது போன்ற தொடர் தீ விபத்துகள் நடப்பது காவல்துறை ரோந்து பணிகள் சுனக்கம் காரணமா அல்லது இவற்றை சரியான முறையில் கவனிக்கத்தவறிய உளவுத்துறை அலட்சியமா அல்லது காவல்துறை துறை நண்பர்கள் பரவலாக அனைத்து கிராம இளைஞர்களையும் ஒருங்கிணைக்காமல் காவல்துறைக்கு சாதகமானவர்களை மட்டுமே வைத்திருப்பது காரணமா, இவை மாவட்ட காவல்துறைக்கே வெளிச்சம்  என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்,  இனியும் கிராமப்புறங்களில் ஏரிகள் தீப்பிடிக்காமல் பாதுகாக்க ஊராட்சி நிர்வாகமும், காவல்துறையும் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என பொருத்திருந்தே பார்ப்போம்.


 


பா.ரவி,


சிறப்பு ஆசிரியர் - தேசிய மக்களாட்சி.


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...