சவுதி அரேபியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3393 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு, 40 நபர்கள் மரணம்....
சவுதி அரேபியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22.06.2020 புதிதாக 3393 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பும், 40 நபர்கள் மரணம் அடைந்தும் இருக்கிறார்கள். கொரோனா வைரஸ் நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 161005 ஆக உயரந்துள்ளதாக சவுதி சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் இதுவரை சவுதியில் 1307 பேர் கொரோனா காரணமாக மரணித்துள்ளார். மேலும் 105175 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கையில் குணமடைந்து சென்றவர்கள் போக தற்சமயம் பாதிப்பில் உள்ளவர்களின் (Active Cases) எண்ணிக்கை 54523 நபர்கள். இன்றைய தினசரி அறிக்கையின் ஆய்வுக் கதை (Case Story) ஒரு குடும்ப நிகழ்ச்சியின் போது பாதிக்கப்பட்ட ஒரு நபர் தேவையான இடைவெளி கடைப்பிடிக்காமல் மற்றவர்களுடன் கைகுலுக்கியதால் 24 பேருக்கு தொற்று பரவியதாகவும் அதில் ஒருவர் கவைலக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இது போன்ற நிகழ்ச்சிகளில் ஒன்று கூடுவதை கூடுமான வரை தவிர்போம். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் கலந்து கொள்ள நேர்ந்தால் தக்க பாதுகாப்பு நெரிமுறைகளைக் கடைப்பிடிப்போம்.
செய்தி சவுதி அரேபியாவிலிருந்து M.அஸ்லம்பாஷா
No comments:
Post a Comment