புதுக்கோட்டை நகரில் நில அளவையாளர் யார் ஊழல் தடுப்புத் துறை தான் கண்டுபிடித்து தரவேண்டும் பொது மக்கள் குற்றச்சாட்டு!
புதுக்கோட்டை நகரில் நில அளவையாளர் யார் என்று தெரியாமல் நிலத்தை அளப்பதற்கு பணத்தை கட்டி விட்டு பொதுமக்கள் நிலை தடுமாறி வருகின்றனர்.பல கொலை குற்ற வழக்குகள் நடப்பதற்கு (100/95) % காரணம் (நிலம்) இடப்பிரச்சனையாக உள்ளது, இதனால் காவல்துறைக்கு மிக மனவுளைச்சளை தருகிறது சட்டம் & ஒழுங்கை காப்பாற்றுவதில்! இதன் காரணத்தினாலோ என்னவோ ஒவ்வொரு பொது மக்களுக்கான பிரச்சனைகளுக்குள்ள காரணத்திற்கும் ஒவ்வொரு துறையை அரசு உருவாக்கி அதற்கென்று தனி அலுவலகம், தனி தலமை அலுவலர், உதவி அலுவலர், கண்காணிப்பாளர்கள், ஊழியர்கள் என்று அரசு நிர்ணயம் செய்து மக்கள் பிரச்சனைகளை உடனுக்குட்டன் தீர்த்து வைக்க, மக்கள் வரிப்பணத்தில் ஊதியமும் கொடுத்து தங்கும் விடுதி, சொகுசு வாகனம் என அனைத்து சலுகைகளை செய்து கொடுத்து அரசு வருகிறது அரசு ஊழியர்களுக்கு. ஆனால் அரசு ஊதியத்தை வாங்கி கொண்டு மக்கள் சேவையை செய்யாமல் வருவாய் துறையை சேர்ந்த ஊழியர்கள் (ஒரு செண்ட் இடம் அளப்பதற்கு ரூ.100ற்கு) 5% வீதம் லஞ்சம் கொடுத்தால் தான் அளந்து கொடுக்க முடியும் என கெடுபுடி செய்து மூன்று ஆண்டுகள் வரையெல்லாம் நிலத்தை அளந்து கொடுக்காமல் பொதுமக்களுக்கு பிரச்சனைகளை மூட்டிவிட்டு அடிதடி, கொலை என குற்ற செயல் நடப்பதற்கு காரணமாக செயல்பட்டு வருகின்றனர் நில அளவையாளர்கள் உள்ளனர், பேரம் பேசுவதற்கு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களை கையில் வைத்து கொண்டு கலப்பணி செய்து வருகின்றனர். புதுக்கோட்டை நகரில் நமக்கு வந்த தகவல் காமராஜபுரம் 32ம் வீதி மற்றொன்று உசிலங்குளம் 3ம் வீதி ஆகிய இரண்டு இடத்தின் உரிமையாளர்களும் அக்கம் பக்கத்தினரின் ஆக்கிரமிப்பு கொடுமையாலும், கொலை மிரட்டல் கொடுமையாலும் தனது இடத்தை அளந்து கொடுக்கு வருவாய்த்துறையில் இடத்தை அளந்து கொடுக்க ஆவணம் செய்து மூன்று வருடங்களுக்கும் மேலாகியுள்ள சூழலில் இந்நாள் வரை யார் நில அளவையாளர் என்று கண்டுபிடிக்க முடியவில்லையாம்!
பாதிக்கப்பட்டோர்களின் படி நமது செய்தி குழு விசாரித்த போது புதுக்கோட்டை நகரத்திற்கு முத்து என்பவர் தான் நில அளவையாளர் என்று கூறுகின்றனர். ஆனால் அவர் இரண்டு அலுவலகங்களுக்கு பணி நியமனம் உண்டாம் ஒன்று நகராட்சி நில அளவையாளர் மற்றொன்று பொது அலுவலகத்தில் உள்ள நத்தம் அலுவலகத்திலும் பணியில் உள்ளவராம். இரண்டு அலுவலகங்கள் நகராட்சி ஆணையாளர் அலுவலகம் மற்றும் நத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்டாட்சியரை கூட நேரில் பார்க்க முடிகிறது முத்து என்பவரை காணமுடியாமல் காணல் நீராய் சென்று விடுகிறார். இது சம்மந்தமாக முத்து என்பவரை தொடர்பு கொண்டு கோட்ட போது நான் தான் நில அளவையாளர் ஆனால் எனக்கும் அந்த இடத்திற்கும் சம்மந்தம் இல்லை கூறி விட்டார், அவருடைய இருக்கை அலுவலகத்தில் சென்று கேட்டால் அவர் தான் நில அளவையாளர் ஆனால் அலுவலகத்திற்கு வரமாட்டார் என்று கூறுகின்றனர், நில அளவையாளர் முத்தை விட உயர் அதிகாரியையும் மதிக்க மாட்டாராம் (மிஸ்டர்) முத்து, அரசு அலுவலகத்திற்கு காலையில் 9.10ற்கு வேலைக்கு வருவது ஈட்டியை பிடித்தபடி பல்லியைப் போல் சுவோரோடு சுவராக ஒட்டியிருந்து விட்டு மாலை 6.10ற்கு ஓடி விடுவது கேட்டால் அரசாங்க உத்தியோகம் என பீத்தி கொள்வது, ஐந்து அறிவு ஜீவன்களைப் போல் ஒரு வாழ்க்கை, தடிமாட்டு முன்டமே ஒழுங்காய் வேலை பார்ப்பவர்கள் கூட உன்னை பார்த்து கெட்டு விடுவார்களடா என்ற வைகை புயல் வடிவேலின் காமெடியைப் போல் தனது கைபேசி நம்பரை அரசு அலுவலகத்தில் எழுதி வைத்துவிட்டு நில அளவையாளரின் கதை உண்மையாக உள்ளது நகர நில அளவையாளர் மிஸ்டர் முத்துவின் வாழ்க்கை, மக்கள் வரிப்பணத்தில் ஊதியத்தை பெற்று கொண்டு மக்களுக்கு சேவை செய்யாமல் மக்களுக்குள் பிரச்சனைகள் மூட்டிவிட்டு, காவல் நிலையம் செல்வதற்கு காரணமாக இருந்து வரும் நில அளவையாளர் மிஸ்டர் முத்து மீது அத்துறை உயர் அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வசதி உள்ளோர்களுக்கு ஒரு வேளையும், வசதி வாய்ப்பற்றவர்களுக்கு ஒரு வேளையுமாக தனது பணியினை செய்து வரும் முத்து நில அளவையாளருக்கு தமிழக அரசு பாடம் புகட்ட வேண்டும். பணம் பணம் என்று சதவீதம் கணக்கில் லஞ்சங்களை வாங்கி கொண்டு அப்பாவி மக்களின் கோரிக்கைகளை நிராகரித்து வரும் நகர நில அளவையாளர் மீது உடனடியாக ஊழல் தடுப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.
A.M.இஸ்மாயில்
துணை ஆசிரியர் - தேசிய மக்களாட்சி
No comments:
Post a Comment