2020 ஹஜ் பயணத்திற்கு சவுதி அரேபியாவில் இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி
இந்த ஆண்டு ஹஜ் புனித 2020 பயணத்திற்கு சவுதி அரேபியாவில் இருப்பவர்களுக்கு மட்டுமே (குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு) அனுமதி. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டினருக்கு அனுமதி இல்லை.
ஹஜ் 2020 விதிமுறைகள்,
1. சவூதி அரேபியாவில் வசிப்பவர்கள் மட்டுமே இந்த ஆண்டு (2020) ஹஜ்ஜில் கலந்து கொள்வார்கள்,
2. ஹஜ் செய்பவர்களின் எண்ணிக்கை பல்லாயிரத்தை எட்டாது,
3. 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஹஜ்ஜுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்
4. நாட்பட்ட நோய்கள் உள்ளவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்,
5. ஹஜ்ஜுக்கு செல்லும் முன், மக்கள் கட்டாயம் கொரோனா அறிகுறிக்கான பரிசோதனை செய்யப்படுவார்கள்,
6. ஹஜ் முழுவதும் கடுமையான சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படும்,
7. யாத்ரீகர்களின் சுகாதார நிலை தினமும் சரிபார்க்கப்படும்,
8. ஹஜ் யாத்திரை முடிந்ததும் சில நாட்கள் மக்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்,
(தகவல் : _Haramain Sharifain அதிகாரப்பூர்வ அறிக்கை).
செய்தி சவுதி அரேபியாவிலிருந்து M.அஸ்லம்பாஷா
No comments:
Post a Comment