நீலகிரி மாவட்டம் உதகை மார்கட்டில் தீ விபத்து நம்முடைய தேசிய மக்களாட்சி டீம் புலனாய்வு சிறப்பு பார்வை

நீலகிரி மாவட்டம் உதகை மார்கட்டில் தீ விபத்து நம்முடைய தேசியநமக்களாட்சி டீம் புலனாய்வு சிறப்பு பார்வை...



நீலகிரி மாவட்டம் உதகை மார்கட்டில் தீ விபத்து இந்த செய்தி கடந்த இரண்டு நாட்களாக மீடியா பேஸ்புக்  வாட்ஸ்சப்  என்று பல வகையிலும் காட்டப்பட்டு  அரசியல்வாதிகள்  அரசு அதிகாரிகள் என்றுபலரும் பேட்டி கொடுத்துகொண்டுள்ள வேளையில் நம்முடைய மக்களாட்சி புலனாய்வு டீம் களத்தில் இறங்கியது.   அதில் கிடைத்த தகவலின்படி   இரவு 12 மணியளவில் ஆரம்பித்த இந்த தீ விபத்து சுமார்  2. மணிநேரம்  தீயணைப்பு துறையினரையும், காவல்துறையினரையும் தனியார் தண்ணீர் வண்டி டிரைவர்களையும் பாடாய் படுத்தி  பலத்த சேதங்களுக்கு பிறகு அணைந்துள்ளது. மேலும் இந்த தீ விபத்தில் வெடித்த   இந்த நிகழ்வு  பற்றி பேட்டி அளித்துள்ள அரசு அதிகாரிகள் இந்த சேதாரத்திற்கு  முழுக்க முழுக்க. மார்கட் வியாபாரிகள் மட்டுமே காரணம் என்பது போல் பேசி வருவது வருந்ததக்கது. இந்த பகுதியில் மட்டும் சுமார் 80 கடைகளுக்கு மேல் தீ விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.  இந்த பகுதியில் வெடித்து சிதறிய ஒரு சிலிண்டரின் சத்தமே பல கிலோமீட்டருக்கு அப்பாலில் உள்ள கீழ்கோடப்மந்து வரை கேட்டுள்ளதாம், அப்படி என்றால் 39 சிலிண்டர்களும் வெடித்திருந்தால்  உதகை மார்கட் மொத்தமும் அழிந்திருக்கும்.   உண்மையை சொல்லபோனால் மேற்கண்ட நிகழ்வுகள் நிர்வாக சீர்கேடுகளை  மட்டுமே தோலுரித்துக் காட்டுகிறது,


உதகை நகராட்சியின் மார்க்கட் சோதனை அதிகாரிகள் / வாடகை வசூலர்கள்  என்ன செய்துகொண்டுள்ளார்கள் ???இவர்களின் தினசரி பணி குறித்து கவனிக்க வேண்டிய அதிகாரிகள் யார் யார்?? நகராட்சியின் நிழல் கமிஷ்னருக்கும்  உண்மையான கமிஷ்னருக்கும் இதையெல்லாம் கவனிக்க நேரமில்லையா?? என்ற கேள்விகள் மக்கள் மனதில் ஓடுவதை நம்மால் தடுக்க முடியவில்லை அரசுதுறை அதிகாரிகளே,,


சுமார் 39 க்கும் மேற்பட்ட சிலிண்டர்களை மிகவும் நெருக்கமான குறுகிய இடத்தில் எப்படி சட்டத்துக்கு புறம்பாகவும் , விதிமுறைகளுக்கு எதிராகவும் கடைக்காரர்கள் வைத்திருந்தார்கள் ?  இத்தகைய செயல் எத்தனை நாட்களாக/வருடங்களாக நடைபெற்று வருகிறது ? விபத்து ஏற்பட்ட காரணத்தால் மட்டுமே விஷயம் பொதுவில் வந்திருக்கிறது. இல்லாவிடில் இந்த விதிமுறை மீறல்கள் தொடர்ந்து கொண்டு தானே இருந்திருக்கும் ? மாவட்டத்தில் அரசு நிர்வாகம் முறையான சோதனைகளை செய்திருந்தால் இது போன்ற விதிமுறை மீறல்களை ஆரம்பத்திலேயே தடுத்திருக்கலாமே ? கடைக்காரர்களுக்கு அரசு நிர்வாகத்தின் மீது பயமில்லையா???  அல்லது அரசு நிர்வாகத்தில் உள்ள சில கருப்பு ஆடுகள் துணை போகின்றனவா ???எனும் கேள்வி மக்கள் மன்றத்தில் எழுந்துள்ளதே ! ஆக அரசு நிர்வாகத்தின் மெத்தனப் போக்கும் , சீர்கேடுமே இத்தகைய விதிமுறை மீறல்களுக்கும் அதன் தொடர்ச்சியான விபத்துக்கும் காரணம் என்பது மக்களின் பரவலான கருத்து.   அரசு நிர்வாக அமைப்பு மக்கள் நலனுக்காக மக்களின் வரிப்பணத்திலே தான்  நடைபெறுகிறது,


அரசு அதிகாரிகள் மக்களின் சேவகர்கள் அவர்கள் சம்பளம் பெறுவதும், வண்டி வாகனங்களில் சொகுசாக பயணம் செய்வதும் மக்களின் வரிப்பணத்தில் தான்,


இந்திய பிரதமர் திரு.மோடி அவர்களே தான் இந்நாட்டின் "பிரதம சேவகன் " எனப் பணிவோடு சொல்லிடும் நிலையில் அரசு‌ அதிகாரிகள் சிலர் ஏதோ தாங்கள் வானத்தில் இருந்து குதித்தது போலவும் , அரசு நிர்வாகம் ஏதோ தங்களுக்கு கட்டுப்பாடற்ற சகல அதிகாரங்களை கொடுத்திருப்பதாக நினைத்துக் கொண்டு அதிகார போதையில் ஆடுவதை பார்த்து மக்கள் சிரிக்கவே செய்கிறார்கள்.  என்னதான் நாம் சங்கை எடுத்து ஊது ஊது என்று ஊதினாலும் இவர்கள் தற்போது அணிந்திருக்கும் முக கவசத்துடன் சேர்ந்து காதுக்கும் ஒரு கவசத்தை மாட்டி கொள்வார்கள் போல!!!   மாவட்ட ஆட்சியரின் (வாட்ஸ்  ஆப்புக்கு ) ஸாரி வாட்ஸப்புக்கு மக்கள் எதை அனுப்பினாலும் அது மாவட்ட ஆட்சியருக்கு காட்டப்படாமல் மறைக்கப்படுகிறது. இதனை மறைக்கும் கருப்பு ஆடு குறித்தும் விவரங்கள் சேகரிக்கப்படுவதாக தெரியவருகிறது. அப்படி என்றால் அதனை கொண்டுவந்த நோக்கமே சிதைகிறதே?? இதை கலெக்டர் கவனிப்பாரா???


A.P. அஸ்மத் அலி முதன்மை ஆசிரியர்  தேசிய மக்களாட்சி புலனாய்வு இதழ்


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...