தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுப்பையாபுரம் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் 80 ரூபாய் பணியளர்களுக்கு வழங்கியாதால் பெண்கள் அதிர்ச்சி

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுப்பையாபுரம் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில்  80/- ரூபாய் பணியளர்களுக்கு வழங்கியாதால் பெண்கள் அதிர்ச்சி...



தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சுப்பையாபுரம் கிராம ஊராட்சியில் நீண்ட நாட்களாக 80 ரூபாய் சம்பளத்தை வழங்கியதாக பணியாளர்களும் பொதுமக்களும் விவசாயிகளும் அதிர்ச்சியில் உள்ளனர்,


ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியங்களில் 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. சுப்பையாபுரம் கிராம பஞ்சாயத்தில் அருணாசலபுரத்தில் பணி செய்யும் பணியாளர்களுக்கு தமிழக அரசு அறிவித்த உதியத்தை வழங்காமல் 80 ரூபாய் சம்பளம் நீண்டா நாட்களாக பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்துள்ளதாகவும் உயர்அதிகாரிகள்  கவனக்குறைவே இதுவே போன்ற மோசடிகள் நடைப் பெறுவதற்க்கு காரணம் என பணியாளர்கள் பொதுமக்கள் விவசாயிகள் குற்றம் சாற்றி வருகின்றனர். வெளியூரில் வசிக்கும் நபர் பெயர்களில் வேலை செய்தாகவும் ஒரு சில பணிகள் முடியாத பணிகளை முடிந்ததாகவும் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டு வந்துள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்,


100 நாள் வேலை திட்டத்தில் சம்பளத்தை மோசடி செய்த அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி 15/06/2020 அன்று தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் விக்கிரமராஜா மற்றும் புவேனஸ்வரி, பாக்கியத்தாய் ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் சார்பாகவும் புகார் மனு அளித்துள்ளனர் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை உடனடியாக மாவட்ட நிர்வாகம் எங்கள் கிராம ஊராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகளையும் தேசிய வேலைவாய்ப்பு திட்டத்தில் நடந்த மோசடி நடைபெற்றதை களஆய்வு மற்றும் தணிக்கை செய்தும் பாதிக்கப்பட்ட பயணாளிகளுக்கு இதுவரையிலும் நிலுவையிலுள்ள சம்பளத்தை உடனடியாக மீட்டுத்தரக் கோரியும் எங்களுக்கு முழுமையான சம்பளத்தை வழங்கிடவும்.  குறைந்த சம்பளத்தைமோசடி செய்த அலுவலர்கள் மீது மாவட்ட நிர்வாகம்  துறைசார்ந்த நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் பஞ்சாயத்து அலுவலகம் முன் பெண்கள் விவாசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.


 


கோவிந்தராஜ்,


மாவட்ட நிருபர், தென்காசி.


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...