ஆலங்குளத்தில் பெண் காவலரின் பிறந்தநாளை காவல் நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாடிய  காவல்துறையினர்

ஆலங்குளத்தில் பெண் காவலரின் பிறந்தநாளை காவல் நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாடிய  காவல்துறையினர்...



தென் மண்டல காவல்துறை தலைவர் முனைவர் திரு எஸ் முருகன் IPS அவர்களின் உத்தரவுப்படி தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  திரு சுகுணாசிங் இ.கா.ப.அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து காவல் துறையினருக்கும் அவர்களின் பிறந்த நாள் அன்று அவர்கள் பிறந்த நாளை கொண்டாடி அவருக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது,


இதன்படி இன்று ஆலங்குளம் காவல் நிலைய முதல் நிலை காவலர் 2312 திருமதி முருகேஸ்வரி அவர்களின் பிறந்தநாள் ஒரு கோட்ட  துணை காவல் கண்காணிப்பாளர் திரு பொன்னிவளவன் அவர்கள் மற்றும் காவல் ஆய்வாளர் சந்திரசேகர் அவர்கள் தலைமையில் காவல் நிலையத்தில் வைத்து கேக் வெட்டி கொண்டாடும் நிகழ்ச்சியில்  காவல் அதிகாரிகளும் சக காவலர்களும் கேக் வெட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.   காவல்துறையினரின் பணி சுமை யிடையே இவ்வாறு காவல் நிலையத்தில் வைத்து கேக்வெட்டி பிறந்தநாளை கொண்டாடி விடுமுறை அளிப்பது காவல்துறைக்கு மன மகிழ்ச்சியாகவும் உற்சாகமாவும் இருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.


 


தென்காசி மாவட்ட செய்தியாளர்


A. கோவிந்தராஜ்


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...