ஆலங்குளம் தாலுகா அலுவலகத்தில் உலக பேரிடர் குறைப்பு நாள் குறித்து கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு...
ஆலங்குளம் அக். 14- உலகபேரிடர் குறைப்பு நாள் குறித்து ஆலங்குளம் தாலுகா அலுவலகத்தில் கல்லூரி மாணவிகளுக்கு தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். உலக பேரிடர் குறைப்பு நாளாக அக்டோபர் மாதம் 13; தேதியை கடைபிடிக்கும் படி ஐக்கிய நாடுகள் சபை முடிவு செய்து அறிவித்துள்ளது. இதைதொடர்ந்து ஆண்டுதோறும் அன்றைய தினம் பொதுமக்கள், கல்லூரி மாணவ மாணவிகளுக்கு நிலநடுக்கம், புயல் வெள்ளம,; வறட்சி உள்ளிட்ட இயற்கை பேரிடரின்போது ஏற்படும் அபாயத்தில் இருந்து எப்படி? பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகி;ன்றது. ஆலங்குளம் தாலுகா அலுவலத்தில் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில் கல்லூரி மாணவிகளுக்கு இயற்கை பேரிடரில் இருந்து எவ்வாறு? பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்க்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ஆலங்குளம் வட்டாச்சியர் பட்டமுத்து தலைமை தாங்கினார். ஆலங்குளம் தீயணைப்பு நிலையம் அலுவலர் சுடலைவேல், ரெட் கிராஸ் சொசைட்டி நிர்வாக குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னனி தீயணைப்பு வீரர் சிவக்குமார், ஜஸ்டின் ராஜ், அந்தோணி உள்பட கல்லூரி மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். (ஆலங்குளம் ஆர். ஏ. இன்ஸ்டிடியூட், மதர் திரேசா இன்ஸ்டிடியூட், ஆலடி அருணா செவிலியர் கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர்.
தென்காசி மாவட்ட செய்திகள்
A. கோவிந்தராஜ்
No comments:
Post a Comment