தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரையில் தமுமுக சார்பில் தடையை மீறி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்...
முன்னாள் வக்ப் வாரிய தலைவர் அண்ணன் ஹைதர் அலி அவர்களின் ஆலோசனையின்படி தமுமுக மாநில துணை தலைவர் கோவை செய்யது அவர்களின் வழிகாட்டுதலின் படி இன்று 18.10.2020 மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளைச் செயலாளர் மேத்தப்பிள்ளை அவர்கள் தலைமை தாங்கினார்கள். நகர துணைத்தலைவர் சலீம், மருத்துவ சேவை அணி செயலாளர் அசன் நகர தொண்டரணி செயலாளர் இஸ்மாயில், இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை செயலாளரார் சிராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமுமுக மாநில செயலாளர் நயினார் முகம்மது அவர்கள் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் தமுமுக மாவட்ட துணைத்தலைவர் சாம்பவர் செரிப், தமுமுக மாவட்ட பொருளாளர் செங்கை ஆரிப், தமுமுக மாவட்ட துணைச் செயலாளர்கள் தென்காசி சலீம், அச்சன்புதூர் ரஜாய் மாவட்ட தொண்டரணி பொருளாளர் வடகரை துரை, ஊடகப் பிரிவு மாவட்ட பொருளாளர் செங்கை உமர், தமுமுக மாநில தொண்டரணி துணை செயலாளர் தென்காசி கோகோ அலி, மாநில ஊடகப் பிரிவு துணைச் செயலாளர் ஆதம் காசியார், தென்காசி நகரத்தலைவர் அபாபீல் மைதீன், மற்றும் சகோதர அமைப்புகள் SDPI, IUML, பழனிபாபாபேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னாள் நகரச் செயலாளர் முகம்மது மரைக்காயர் அவர்கள் நன்றியுரை கூறினார்.
தென்காசி மாவட்ட செய்தியாளர்
A. கோவிந்தராஜ்..
No comments:
Post a Comment