தலைவிரித்தாடும் கடையநல்லூர் தங்க நகைக்கடை பிரச்சினை

தலைவிரித்தாடும் கடையநல்லூர் தங்க நகைக்கடை பிரச்சினை...



விவசாயி வாங்கிய நகை விலை போகாத அவலம் - கடையநல்லூர் தங்கத்தின் தரம்.   தென்காசி மாவட்டம் புளியங்குடி புன்னையாபுரம் பகுதியை சேர்ந்தவர்.   விவசாயி ராமர் இவர் கடந்த 28.04.2017 அன்று கடையநல்லூர் நத்தக்கர்  பள்ளிவாசல் தெருவில் உள்ள ஏ ஐ கே கோல்டன் குரூப் நகைக்கடையில் 20 கிராம் தங்கச் சங்கிலி ஒன்றை எடுத்துள்ளார்.   அன்றைய மார்க்கெட் நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் 2 ஆயிரத்து 927 ரூபாய் ஆகும். மொத்தம் 58 ஆயிரத்து 627 ரூபாய்க்கு அவர் தங்கச்சங்கிலி ஒன்றை அந்த கடையில் விலைக்கு வாங்கியுள்ளார். அதற்கான பில்லும் பெற்றுள்ளார்.   இந்த நிலையில் அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த விற்பனை செய்வதற்காக புளியங்குடியில் உள்ள தனியார் தங்க கடையில் சென்று விற்பனை செய்வதற்காக நகை கடையில் தங்க செயினை கொடுத்துள்ளார். அப்போது அதனை உரசிப் பார்த்த கடை அதிபர் ஹால்மார்க் உள்ள அந்தத் தங்கச் சங்கிலி ஒரு பாகத்தை எடுத்து உருக்கியுள்ளார் அப்பொழுது 64 டச் மட்டுமே இருந்துள்ளது.   உடனடியாக அவர் அந்த விவசாயிடம் தரம் குறைந்த நகை இது இந்த நகை விலை  போகாதே என்று அவர் தெரிவிக்கவே அதிர்ச்சி அடைந்த விவசாயி தான் கடையநல்லூரிலுள்ள பிரபலமான  அந்த கடையில் தங்க நகை வாங்கியதாகவும் அடையாளத்துடன் பெறப்பட்டதாகவும் அதற்கான பில்லை கொண்டு வந்து நகைக்கடை உரிமையாளர் வசம் கொடுக்கவே உடனடியாக நகை கடை அதிபர் புளியங்குடி நகைக்கடை அதிபர்கள் சங்கத்தின் கூட்டத்தைக் கூட்டி இது குறித்து விவாதித்துள்ளார்.   இதனை தொடர்ந்து அந்த சங்கத்தை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயி ஆகியோர் இன்று கடையநல்லூரில் உள்ள நத்தகர் பள்ளிவாசல் தெருவில் அமைந்திருக்கும் குறிப்பிட்ட தங்கக் கடைக்கு சென்று விளக்கம் கேட்கவே அவர்கள் அதை உருக்கி பார்த்தபொழுது 62 டச் தங்கம் இருப்பது உறுதிசெய்யப்பட்டது.   பின்னர் தங்கள் கடையில் நடந்த தவறுக்கு உரிய இழப்பீடாக இன்றைய மார்க்கெட் நிலவரப்படி தங்கம் அல்லது பணம்  கொடுப்பதாகவும் அந்தத் தங்கச் சங்கிலியை  தங்களிடம் கொடுத்து விடுவதாகவும் கடை நிர்வாகம் விவசாயி சார்ந்தவர்களிடம் தெரிவித்துள்ளார்.   ஆனால் இதனை நகை வியாபாரிகள் சங்கத்தினரும் சம்பந்தப்பட்ட விவசாயி ஏற்க மறுத்ததோடு நாங்கள் இதுகுறித்து மேல் நடவடிக்கைக்காக நீதிமன்றம் செல்ல உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.   மேலும் நகை வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் விவசாயி தெரிவித்ததாவது தங்கம் தரம் குறைந்தது என கடை நிர்வாகம் தெரிவித்ததாகவும், தாங்களே மாற்றி தருவதாகவும், தவறு நடந்து விட்டதாகவும் அவர்கள்  தெரிவித்துள்ளனர்.   கடையநல்லூரில் வெளிநாட்டு தங்கம் விற்பனை செய்யும் கடை 100க்கும் மேற்பட்ட தங்க நகை கடைகள் செயல்பட்டு வருவதாகவும், இந்த கடைகளில் சில கடைகள் தரம் குறைந்த நகைகள் விற்பனை செய்யப்படுவதாகவும், இந்த கடைகளில் தங்கம் வாங்குவதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான மக்கள் கடையநல்லூரில் தரமான நகை கிடைக்கும் என்று ஏராளமானோர் வந்து வாங்கிச் செல்வதாகவும் இதுபோன்ற முறைகேடுகள்  நடப்பதால் மொத்தத்தில் தங்க நகை விற்பனை செய்பவர்களுக்கு பெரும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாகவும் நகை வியாபாரிகள் தெரிவித்தனர்.   தரமான தங்கம் வாங்க கடையநல்லூருக்கு  வாங்க என்கின்ற வாசகத்தோடு ஏராளமான புரோக்கர்கள் கடையநல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் நிலையில் ஏராளமான தங்க கடைகளில் தரம் குறைந்த தங்கம் விற்பனை செய்யப்படுவது மாவட்ட மக்களை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  2017 ஆம் ஆண்டு வாங்கிய தங்கத்தின் தரம் 2020இல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது இதுபோன்று எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது போகப்போகத்தான் தெரியும்.


 


தென்காசி மாவட்ட செய்தியாளார்


A. கோவிந்தராஜ்.


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...