கடலூர் மாவட்டத்திற்கு கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் எதிர்வரும் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்வது குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை...
கடலூர் மாவட்ட ஆட்சியர் திரு சந்திரசேகர் சாகமூரிIAS அவர்கள் வருவாய் நிர்வாக ஆணையரை வரவேற்றார் அவருடம் கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீ.அபிநவ் அவர்களும் வரவேற்றனர் பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பேரிடர் உபகரணங்களை வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி IAS அவர்கள் பார்வையிட்டார். அப்பொழுது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீயணைப்பு துறை அதிகாரிகளும் உடன் இருந்தனர் மேலும் பேரிடர் கால வானொலியான 107.8. அலைவரிசையில் பேரிடர் குறித்த விழிப்புணர்வு பொது மக்களிடையே உரையாடினார் அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் முதன்மை கூட்ட அரங்கில் அனைத்து துறை அதிகாரிகளுடன் எதிர்வரும் வட கிழக்கு பருவ மழை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தினர். இதில் பெருமாள் ஏரி கரையில் பேரிடர் பருவ மழை காலங்களில் மக்களை எப்படி காப்பாற்றுவது என்ற ஒத்திகையை சென்னை அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை (NDRF) குழுவினர் நிகழ்ச்சியை நடத்திகாட்டினர். இதற்கான செய்முறை விளக்கங்களையும் வருவாய் நிர்வாக ஆணையர் கேட்டறிந்தார். இதனை பொதுமக்கள் மற்றும் ஏராளமானோர் முன்னிலையில் நிகழ்த்தப்பட்டன.
No comments:
Post a Comment