உதயமாகிறது திருப்பூர் மாவட்டத்தின் மூங்கில் பூங்கா

உதயமாகிறது திருப்பூர் மாவட்டத்தின் மூங்கில் பூங்கா...



மூங்கில் மிகவும் வேகமாக வளரக்கூடிய , அன்றாட வாழ்வில் தேவைப்படக்கூடிய பல்வேறு பொருட்களுக்கான மூலம், உணவு, காகிதம், கைவினை பொருட்கள், கட்டிடம் உள்ளிட்ட ஏறத்தாழ 1500 வகை பயன்பாடுகளை கொண்டது மூங்கில்  காடுகளில் மட்டுமே விளைந்த மூங்கிலை ஒரு கட்டத்தில் காடுகளை காப்பாற்றும் பொருட்டு வெட்டுவதற்கு தடைவிதிக்கப்பட்டது, இதன் காரணமாக மூங்கிலை மூலப்பொருளாக கொண்டு உற்பத்திசெய்ப்படும் பல்வேறு பொருட்களின் உற்பத்தி பின்னடைவை சந்தித்தது, இதனை உணர்ந்த மத்திய அரசு 2006 ம் ஆண்டு தேசிய மூங்கில் இயக்கத்தை (NATIONAL BAMBOO MISSION ) துவங்கி கிராமப்புற பகுதிகள் குறிப்பாக விவசாயிகள் வாயிலாக மூங்கில் விளைவித்து உற்பத்தி செய்வதோடு மூங்கில்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க செய்யவும் அதே சமயம் கிராமப்புற பொருளாதரத்தை உயர்த்தும் முயற்ச்சியில் இறங்கியது.   உலகின் மூங்கில் உற்பத்தியில் இரண்டாம் நிலையில் உள்ளோம் , இருப்பினும் இன்னும் இந்தியாவின் கிராமப்புற பகுதிகளை இதன் விளைச்சல் மற்றும் அதனால் ஏற்படும் பொருளாதார தன்னிறைவு பற்றிய விழிப்புணர்வு அதிகம் கொண்டு சேர்க்கப்படவில்லை என்பதால் 2 ஆண்டுகளுக்கு முன் தேசிய மூங்கில் இயக்கம் மறு சீரமைப்பிற்கு உள்ளாக்கப்பட்டு 1700 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்ட்டுள்ளது.  இந்திய வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் , ( INDIAN FOREST GENETIC and TREE BREEDING ORGANIZATION- IFGTB) தேசிய மூங்கில் இயக்கத்தில் ஒரு அங்கம், வெற்றி அமைப்பின் வனத்துக்குள் திருப்பூர் கடந்த ஒரு வருடமாக இந்த நிறுவனத்துடன் பல்வேறு மர வகைகளின் ஆய்விற்கு தேவைப்படும் களங்களை அமைத்து தருகிறது, இந்த நிலையில் தேசிய மூங்கில் இயக்கத்தின் முன்னெடுப்புகளை திருப்பூர் மாவட்டம் முழுவதுமுள்ள விவசாயிகளிடம் கொண்டு செல்லும் முயற்ச்சியாக திருப்பூர் மாநகராட்சி, வெற்றி அமைப்பு மற்றும் இந்திய வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்துடன் இணைந்து இடுவாய் கிராமத்தில் 12 ஏக்கர் பரப்பளவில் மூங்கில் பூங்கா அமைப்பதற்காக 6 மாதத்திற்கு முன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது,   நேற்றைய தினம் மூங்கில் பூங்காவிற்கான துவக்க விழா நடைபெற்றது, இந்த பூங்காவில்   30 வகையான மூங்கில் மரங்கள் வளர்க்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்கு அதன் தன்மை, வளர்ச்சி மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட தகவல்கள் காட்சிப்படுத்தப்படும்,   12 ஏக்கர் எல்லைகளும் மியவாக்கி முறையில் மரக்கன்றுகள் நடவு,  குழந்தைகள் விளையாட பூங்கா   பட்டாம்பூச்சி பூங்கா   மூலிகை பண்ணை   திட கழிவு மேலாண்மை மாதிரி அமைப்பு   கழிவுநீர் மேலாண்மை மற்றும் மறுசுழற்சி உபயோகத்தை விளக்கும் மாதிரி அமைப்பு   நெகிழி இல்லா திருப்பூர் குறித்த விவரங்கள் உள்ள மாதிரி அமைப்பு   குளம் ஒன்று அமைக்கப்பட்டு தாமரை, அல்லி போன்ற மலர்கள் வளர்ப்பு   மழை நீர் சேகரிப்பு மாதிரி அமைப்பு   இன்னும் ஒரு வருடத்தில் மேலே குறிப்பிட்ட அனைத்தும் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு மாநிலத்தில் ஒரு சிறந்த மூங்கில் பூங்காவாக உருவெடுக்கும் அதற்கான அனைத்து பணிகளையும் வெற்றி அமைப்பின் வனத்துக்குள் திருப்பூர் முன்னெடுத்துவருகின்றது.  -வனத்துக்குள் திருப்பூர் திட்ட குழு 20.10.2020  இந்த மூங்கில் தோட்டத்தின் சிறப்புகள் .  * Oxygen Park * ஒரு மூங்கில் மரம், முழுமையாக வளரும்போது, ​​ஒவ்வொரு ஆண்டும் 300 கிலோவுக்கு மேல், ஆக்ஸிஜனை உருவாக்குகிறது, இது ஒரு தனி நபருக்கு ஒரு வருடம் முழுவதும் போதுமானது ஆகும்.   * Carbon Sink * ஒரு ஏக்கரில் வளரும் மூங்கில் மரங்கள், ஒரு வருடத்திற்கு 80 டன் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சும் திறன் பெற்றவை.


 


திருப்பூர் மாவட்ட நிருபர் பாலசுப்ரமணியம் ஜி


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...