ஆலங்குளம் அருகே நெட்டூர் ஊர் பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

ஆலங்குளம் அருகே நெட்டூர் ஊர் பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்....



தென்காசி மாவட்டம், ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெட்டூர் பகுதி கரும்புள்ளி கிராமமாக அழைக்கப்பட்டு வருகிறது.இதனை மாற்ற வேண்டும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுகுணா சிங் இ.கா.ப அவர்களின் அறிவுரையின்படி, ஆலங்குளம் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு. பொன்னிவளவன் மற்றும்  ஆலங்குளம் காவல் ஆய்வாளர்  திரு. சந்திரசேகர் அவர்களின் ஏற்பாட்டில்  பொதுமக்களுக்கும் காவல் துறையினருக்கும் நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.    இந்நிகழ்ச்சியில் கலாச்சார நிகழ்ச்சிகள்,கும்மி பாடல்கள்,கிராமிய நிகழ்ச்சிகள் போன்றவை அந்த ஊர் பொது மக்கள் மூலம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பரிசுகளை வழங்கினார்.   கல்வியின் முக்கியத்துவத்தை பொது மக்களுக்கு உணர்த்தும் விதமாக அனைவரும் கட்டாயம் கல்வி கற்க வேண்டும் தங்கள் வாழ்க்கையில் கல்வியின் மூலம் தான் முன்னேற முடியும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.  மேலும் அப்பகுதியில் 10ம் வகுப்பு மற்றும் 12 ம்வகுப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெற்ற மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக  அவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.   பொதுமக்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில்   தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி, பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை  கல்வி பயில வைத்து அவர்கள் வாழ்க்கையில் முன்னேற வழி வகுக்க வேண்டும் முன்னாள் குடியரசு தலைவர் திரு.APJ. அப்துல் கலாம் அவர்கள் கூறியது போன்று இளைஞர்களின் கையில் தான் எதிர்காலம் உள்ளது.    எனவே குழந்தைகளை நல்ல முறையில் கல்வி பயில வைத்து நெட்டூர் பற்றி பொது மக்களின் எண்ணத்தை மாற்றி நெட்டூர் தமிழகத்திலேயே சிறந்த கிராமாக மாற வேண்டும் அது பெற்றோர்களின் கையில்தான் உள்ளது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.       கரும்புள்ளி கிராமமாக எல்லோராலும் அறியப்பட்ட நெட்டூர் கிராமத்தில் காவல்துறையினரின் பொது மக்களுடன் நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக மேற்கொண்ட இந்த முயற்சியை சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.


 


தென்காசி மாவட்ட செய்தியளர்


A. கோவிந்தராஜ்...


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...