தென்காசியில், தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.....
தென்காசியில், தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனை N கூட்டம், தென்காசி பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் தேசியக்குழு உறுப்பினர் தென்காசி எம்.சண்முகம் தலைமை யில் நடைப்பெற்றது. டி.யூ.ஜே.யின் தென்காசி மாவட்டத் தலைவர் சு.இராஜேந்திரன், தென்காசி பத்திரிகையாளர் மன்றத்தின் மாவட்டத் தலைவர் கணபதி பாலசுப்பிரமணியன், மாவட்டப் பொருளாளர் கே.எஸ்.கணேசன் முன்னிலை வகித்தனர். பத்திரிகையாளர் மன்றத்தின் முன்னாள் தலைவர் எம்.முத்துசாமி வரவேற்றார். தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ், அவர்கள் பத்திரிகையாளர் களுக்கு தமிழக அரசு செய்ய வேண்டிய சலுகைகளின் அவசியம் குறித்து சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் 18-ஆவது மாநில மாநாட்டை 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தென்காசியில் நடத்த தீர்மானிக்கப்பட்டது. தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் கு.வெங்கட்ராமன், மாநிலத் துணைத் தலைவர் நாசரேத் ஜெ.நிக்சன், டெல்டா மண்டலச் செயலாளர் எ.எழில் வாழ்த்துரை வழங்கினர். கூட்டத்தில் தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தின் பத்திரிகையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் முருகன், இசக்கிமுத்து, செ.பா.தவசிக்கனி, A.கோவிந்தராஜ் பெரியார், மாரிப்பாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தென்காசி மாவட்ட செய்தியாளர்
A. கோவிந்தராஜ்...
No comments:
Post a Comment