சென்னை ராயபுரத்தில் லெதர் பேக் தயாரிக்கும் கம்பெனியில் தீ விபத்து...
சென்னை ராயபுரம் கல்மண்டபம் லோட்டஸ் ராமசாமி தெருவில் உள்ள லெதர் பேக் தயாரிக்கும் கம்பெனியி ஒன்றில் பேக்,ரெக்ஸின் போன்ற மூலபொருட்கள் உள்ள குடோனில் திடீரென தீப்பற்றியது.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்த தீயணைப்புதுறையினர் தீயை அனைக்க முயர்ச்சித்தனர்.சம்பவ இடத்திற்க்கு இணை ஆணையாளர் மற்றும் துணை ஆணையாளர் விரைந்து வந்து பார்வையிட்டனர்.
இதனையடுத்து தீ மளமளவென பரவுவதை கட்டுக்குள் கொண்டு வர ஏழு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்ச்சிசெய்தனர். மேலும் தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்திருக்கலாம் எனவும் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இது குறித்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்.
வட சென்னை நிருபர் தங்கதுரை..
No comments:
Post a Comment