தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு தேவந்திர பேனாக்கள் அமைப்பு சார்பில் நிலங்களை மீட்டுத்தர ஆர்பாட்டம்

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு தேவந்திர பேனாக்கள் அமைப்பு சார்பில் நிலங்களை மீட்டுத்தர ஆர்பாட்டம்...



தென்காசி மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் முன்பு தேவந்திர பேனாக்கள் அமைப்பு நிறுவனர்  T.C பாலசுந்தரம் அவர்கள் தலைமையில்  ஆர்பாட்டம் நடைப்பெற்றது.   ஆலங்குளம். அருகே சுப்பையாபுரம் கிராமத்தில் ஒருசில பட்டியல் இனத்தவர்கள் ஒரு சமூத்தினர் தேவந்திர பேனக்கள் அமைப்பு உறுப்பினர்களும் நிர்வாகிகளும் வசித்து வருகின்றனர் . அப்பகுதியில் வாழும் பட்டியல் இன மக்களின் நிலங்களை அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்த *NLC india Ltd'* நிறுவனம் நிலமோசடி செய்து அபகாரித்து சோலார் பேனல் அமைத்து உள்ளது.    இது முற்றிலும் அரசியல் அமைப்பு சட்டத்திற்க்கு எதிரானது பட்டியல் இனத்தவர்களின் உரிமைகளையும் உடமைகளையும் அனைவரும் காப்பாற்ற வேண்டும் என இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் பட்டியல் இனத்தவர்களுக்கு சிறப்பு உரிமை வழங்கியும் மேற்படி நிறுவனம் பட்டியல் இன மக்களின் நிலத்தை  அபகரித்து மோசடி செய்து உள்ளது.   மேற்படி  நிறுவனத்திடமிருந்து பட்டியல் இன மக்களின் நிலங்களை மீட்டு தரவேண்டி  ஆர்பாட்டம் நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் 50.க்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.


 


தென்காசி மாவட்ட செய்தியாளர்


A. கோவிந்தராஜ்...


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...