தமிழகத்தில் இன்று முதல் பேருந்துகள் செல்ல அனுமதி பயணிகள் மகிழ்ச்சி...
தமிழகத்தில் கொரோனா தோற்று பரவலின் காரணமாக 2 மாதங்களுக்கும் மேலாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது அதன் பிறகு நிபந்தனைகளின் அடிப்படையில் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது அதன்பிறகு ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது ஆனால் பேருந்துகள் கோயில்கள் சர்ச்கள் பள்ளிவாசல்கள் திறக்க அனுமதிக்கப்படவில்லை. பேருந்துகள் இயக்கப்படாததால் மக்கள் மற்றும் வியாபாரிகள் அனைவரும் மிகுந்த இன்னலுக்கு உள்ளானார்கள் இதைத்தொடர்ந்து இன்று செப்டம்பர் 1 முதல் பேருந்துகள் கோயில்கள் பள்ளிவாசல்கள் ஆகியவை அரசு அறிவுறுத்தலின்படி நிபந்தனைகளின் அடிப்படையில் திறக்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது இதைத்தொடர்ந்து தென்காசி மாவட்டம் தென்காசி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சர்ச்சுகள் மசூதிகள் கோயில்கள் ஆகியவை நிபந்தனைகளை பெயரில் திறக்கப்பட்டன..இதனால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியிலும் ஆரவாரத்தில் உள்ளனர் வியாபாரிகள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.. இதனால் வெளியூரில் இருந்து தன் சொந்த ஊருக்கு திரும்பிய அனைவரும் மறுபடியும் வெளியூர் செல்ல வாய்ப்பாக அமையும் என மக்கள் தெரிவித்துள்ளனர் இதனால் வேலை பார்க்கும் அனைவரும் அவர்கள் வேலை பார்க்கும் இடங்களுக்கு எளிதாக செல்ல முடியும் என மகிழ்ச்சியாக கூறியுள்ளனர்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் A.கோவிந்தராஜ்...
No comments:
Post a Comment