தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே குப்பைகளைக கொட்டி எரிக்கும் இடமாக மாறும் குளம்...
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஒன்றியம் நல்லூர் கிராமம் கெக்டர் 41. 00 ல். சர்வே எண் 45 ல் . 5 ஏக்கர். 95சென்ட் பரப்பளவு கொண்ட குளம் குப்பைகளை கொட்டி எரிக்கும் இடமாக மாறி உள்ளது மேல்புறம் தென்வடல் அடி 301 ஆகவும் கீழ்ப்புறம் தென்வடல் அடி 109 ஆகவும் இருக்க வேண்டியது தற்போது சிறிய ஓடை போன்று காணப்படுகிறது இக்குளத்தின் நல்லூர் ஊராட்சி கிளார்க் தலைமையில் ஊராட்சிதுப்புரவு பணியாளர்கள் மூன்று டிராக்டர்கள் வைத்து தினமும் குப்பைகளைக் கொட்டி வருகின்றனர் பொதுமக்கள் விவசாயிகள் பல முறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இப்பொழுது குளத்தின் அரசு சார்பில் மணல் அள்ளி வருகிறார்கள் டிராக்டர் மூலம் குப்பைகளையும் கொட்டி வருகிறார்கள் ஆகவே தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கவனத்தில் கொண்டு குப்பைகளை கொட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர். மேற்படி குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றி குப்பைகளை அகற்றி 5ஏக்கர் . 95 செண்டு பரப்பளவுகொண்ட முழுமையான குளமாக மாற்றி தர அப்பகுதி விவசாயிகள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் A.கோவிந்தராஜ்.
No comments:
Post a Comment