பி.எஸ்.என்.எல் இணையசேவை பாதிப்பால் வங்கி பரிவர்த்தனைகள் முடக்கம் எனப் புகார்...
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் V.K.புதூர் தாலுகாவுக்கு உட்பட்ட வெங்கடேஸ்வரபுரம் ஊத்துமலை ஆகிய கிராமங்களில் சில நாட்களாக சரவர பி.எஸ்.என்.எல் இணையசேவை பாதிப்பால் வங்கிகளின் பரிவர்த்தனைகள் முடங்கியுள்ளன. தென்காசி மாவட்டம் மாவட்டம் ஆலங்குளம் V.K.புதூர் தாலுகா உட்பட்ட வெங்கடேஸ்வரபுரம் ஊத்துமலை உள்ளிட்ட கிராமபகுதிகளில் பி.எஸ்.என்.எல் அலைபேசி சேவையும், இணைய சேவையும் சில நாட்களாக முற்றிலும் முடங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனால் அப்பகுதி கிராமங்களுக்கு உள்ள பி.எஸ்.என்.எல் இணைய சேவை சரிவர செயல்படாத நிலையால் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மருத்துவத்திற்க்கு 108 ஆம்லன்ஸ் அழைக்க மருத்தவர்களிடம் ஆலோசனை பெற முடியாத நிலையும் அவசரத்திற்க்கு உறவினர்களிடம் பேச முடியாத நிலை ஏற்பட்டும் அப்பகுதியில் இருக்கும் வங்கிகளில் பண பரிவர்த்தனை செய்ய முடியாமல் விவசாயிகள் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் பொதுமக்கள் மருத்துவம் விவசாய பணிகளுக்கான இடுபொருட்கள், விதைகள் உள்ளிட்டவைகளை வாங்க முடியாமலும், விளைவிக்கப்பட்ட காய்கறிகளை சந்தைப்படுத்துவதிலும் சிக்கல் தொடர்வதாகவும் அவர்கள் வேதனையுடன் கூறுகின்றனர். பி.எஸ்.என்.எல் நிர்வாகத்திடம் பலமுறை இப்பிரச்சனை குறித்து புகார் அளித்தும் பயனில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் இதற்கு மாற்றாக மற்றொரு இணைய சேவையை வங்கிக்கு வழங்க பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் A.கோவிந்தராஜ்.
No comments:
Post a Comment