புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் கரூர் பஞ்சாயத்துக்குட்பட்ட விளாங்காட்டூரில், ஆக்கிரமிப்பு அரசு நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்புடன் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு குழு விளாங்காட்டூர்...
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா, கரூர் ஊராட்சி,தனிகொன்டான் வருவாய் கிராமம் விளாங்காட்டூர் கிராமத்தில் ஆக்கிரப்பு என்று மாவட்ட ஆட்சியருக்கு 18/08/2020 அன்று 10 ரூபாய் இயக்கத்தின் மூலம் மனு தரப்பட்டது.அந்த மனு 19/08/2020 அன்று வட்டாட்சியர் அலுவலகம் (ஆவுடையார்கோவில்) அனுப்பப்பட்டுள்ளது. அதிகாரிகள் யாரும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்த ஆக்கிரமிப்பு அதிகாரிகள் ஆதரவோடு நடந்ததா? அப்படி இல்லை என்றால் கிராம தலையாரி என்ன செய்தார் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்தாரா?. Revenue inspector மூலம் வட்டாட்சியர் இந்த ஆக்கிரமிப்பு மீது நடவடிக்கை எடுக்க கால தாமதம் ஏன்? 11 குளங்கள் ஆக்கிரமிப்பு பெரிய அளவிலான முறைகேடு இல்லையா!. தெரிந்தே நடந்ததால் அதிகாரிகள் மெத்தனமா!. இணைப்பு மாவட்ட ஆட்சியருக்கு தரப்பட்ட மனுவில் ஆக்கிரமிப்பு குளங்கள் ஒரு சில நடவடிக்கை எடுக்கப்படுமா என்கிற கேள்வியை பத்து ரூபாய் இயக்கம் மற்றும் விளாங்காட்டூர் பொதுமக்கள் எழுப்பியுள்ளனர்
மேலும் விளாங்காட்டூரில் உள்ள அனைத்து குளங்களும் ஆக்கிரமிப்பு. ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களின் பெயர் பட்டியல் வெளியிட்டனர்,
1.விளாங்காட்டூர் கண்மாய் உள்வாயில் ஆக்கிரமிப்பு.
2.விளாங்காட்டூர் கண்மாய் சரிக்கை தண்ணீர் வடியும் வாரிப் புறம்போக்கு ஆக்கிரமிப்பு.
3.சோனா உடங்கு ஊரணி ஆக்கிரமிப்பு
4.பெரிய ஊரணி ஆக்கிரமிப்பு.
5.சுக்கான் ஊரணி ஆக்கிரமிப்பு.
6.கீழ ஏந்தல் ஆக்கிரமிப்பு.
7.தாமரை ஏந்தல் ஆக்கிரமிப்பு.
8.தேவடியா ஏந்தல் ஆக்கிரமிப்பு.
9.சானார் ஊரணி ஆக்கிரமிப்பு.
10. பறையச் சேரி ஊரணி ஆக்கிரமிப்பு
11.கரூர் To மீமிசல் சாலை ஆக்கிரமிப்பு எனவே சமூகம் நேரடியாக விசாரணை செய்து ஆக்கிரமிப்பை அகற்றி நீர் நிலைகளை பாதுகாத்து தர எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
No comments:
Post a Comment