தென்காசி ஆட்சியரிடம் நற்சான்றிதழ் பெற்ற துணை மண்டல வட்டாச்சியர்...
தென்காசியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் அவர்கள் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் துணைமண்டல வட்டாச்சியர் திரு செல்வக்குமார் அவர்களுக்கு நற் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். தென்காசி ஐ .சி. ஐ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது விழாவிற்கு மாவட்ட ஆட்சி தலைவர் அருண் சுந்தர் தயாளன் அவர்கள் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்தார் பின்னர் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு தேசியக் கொடியை கொடி மூவர்ணத்தில் பலூன்களை பறக்க விட்டார் விழாவில் கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய அரசுத்துறை அலுவலர்கள் காவல் துறையினர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பாராட்டியும் நற் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். கடையநல்லூர் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் சிறப்பாக தடுப்பு நடவடிக்கைகள் .பணியாற்றிய செல்வகுமார் அவர்களுக்கு மாவட்ட ஆட்சி தலைவர். அருண் சுந்தர் தயாளான் அவர்கள் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார். நற்சன்றிதழ் பெற்ற துணைமண்டல வட்டாச்சியர் திரு.செல்வக்குமார் அவர்களை வட்டாச்சியர்கள் வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள். கிராம நிர்வாக உதவியாளர்கள் பணியாளர்கள், வருவாய்துறை சங்க நிர்வாகிகள் அரசு ஊழியர்கள் மற்றும் பலர் பாரட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
தென்காசி மாவட்ட செய்தியாளர்
A.கோவிந்தராஜ்
No comments:
Post a Comment