தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகரில் இந்திய காங்கிரஸ் கட்சியினர் மறைந்த வசந்குமார் MP திருஉருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி....
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகரில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியினுடைய சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியினுடைய மாநில தலைவரும் கன்னியாகுமாரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமாகிய H. வசந்தகுமார் காலமானார் அவருக்கு 5 நிமிடம் மொளவுன அஞ்சலி செலுத்தியும் அவரது திருஉருவபடத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் பொன்விழா கமிட்டித் தலைவர் சித்திரைகன்னு, தலைமை வகித்தார் குருவிகுளம் ஒன்றிய காங்கிரஸ் கட்சியின் வட்டார செயலாளர் அழகைகண்ணன் முன்னிலை வகித்தார் மேற்படி நிகழ்வில் நகர துணை தலைவர் பீர்முகமது, தகவல் தொழில்நுட்ப பிரிவுசெயலாளர் நசரூதீன், சிவாஜி மன்ற நிர்வாகி பாலகிருஷ்ணன் , முன்னாள் சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் கணேஷ், சங்கரன்கோவில் ஒன்றியம் பொறுப்பாளர் தங்கராஜ், மற்றும் மகளிர் அணி நிர்வாகி புஷ்பவல்லி, மாநில முன்னாள் புதிரைவண்ணார் நலவாரிய உறுப்பினர் வைத்தியர் மனோகரன், மற்றும் கட்சி நிர்வாகிகள் மகாலிங்கம், முப்புடாதி 30க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்கள்.
தென்காசி மாவட்ட செய்தியாளர்
A. கோவிந்தராஜ்.
No comments:
Post a Comment