தென்காசி - சாலையில் கிடந்த பணம் எடுத்து உரியவரிடம் ஒப்படைத்தவருக்கு காவல்துறை மூலம் பாராட்டு..
தென்காசி சாலையில் கிடந்த பணத்தை எடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த உரிய நபரிடம் சேர்க்க உதவிய நபருக்கு காவல் துறை சார்பாக பாராட்டு தெரிவிக்கப்பட்டது தென்காசி மாவட்டம் தென்காசி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மலையன் தெருவைச் சேர்ந்த செய்யது அலி என்பவர் வாஹினி தியேட்டர் அருகில் சாலையில் செல்லும்போது கிழே கிடந்த 16000/= ரூபாயை எடுத்து தென்காசி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார் அவரின் இந்த மனித நேயமிக்க செயலைப் பாராட்டி சுதந்திர தின விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுனா சிங் அவர்கள் பாராட்டுச் சான்றிதழை வழங்கினார். இந்நிலையில் பணத்தை தவற விட்ட நபர் காவல் நிலையம் வந்து உரிய அடையாளம் கூறியதால் பணத்தை எடுத்து கொடுத்து செய்யது அலி மூலமாக தொலைந்த பணம் மீண்டும் அதனை தவற விட்ட நபரிடம் தென்காசி காவல் ஆய்வாளர் ஆடிவேல் அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது.
தென்காசி மாவட்ட செய்தியாளர்
A. கோவிந்தராஜ்
No comments:
Post a Comment