மானிய விலையில் வழங்கின்ற அம்மா சிமிண்ட் தடையில்லாமல் வழங்க எம் ஜி ஆர் மக்கள் கட்சி மாநில தலைவர் அறிக்கை...
தமிழ்நாட்டில் வாழ்கின்ற ஏழை நடுத்தர மக்கள் தங்கள் குடியிருப்புகளை கட்டிக் கொள்ளவும் குடியிருந்து வரும் குடியிருப்புகளை புதுப்பித்து கொள்ள தமிழக அரசு மானிய விலையில் வழங்கிய அம்மா சிமிண்டை தடையில்லாமல் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் தமிழகமெங்கும் குடிசைகளில் வாழும் ஏழைமக்கள் தங்கள் புதிய வீட்டை தாங்களே கட்டிக்கொள்ளவும் பழைய வீட்டை புதுப்பித்துக் கொள்ளவும் கிராம நிர்வாக அதிகாரியின் பரிந்துைரையின் படி தங்கள் குடும்ப அட்டை கார்டுகளின்படி நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் அம்மா சிமிணட் மானிய விலையில் ரூபாய் 190/- ரூபாய்க்கு வழங்கப்பட்டு வந்தது இதனால் ஏழை மக்கள் பயன் அடைந்து வந்தனர் தற்ப்போது ஆலங்குளம் நுகர் பொருள் வாணிப கழகம் மூலம் கடந்த ஆறுமாத காலமாக ஐம்பதுக்கும் மேற்பட்ட ஏழை மக்களிடம் அரசு வழங்கும் மானிய விலையில் அம்மா சிமிண்ட்-க்கான பணத்தை பயணிட்டாளர் களிடத்தில் இருந்து நேரடியாக அரசு வங்கி கணக்கில் பணம் செழுத்தி அதற்க்கான ஓப்புதலும் சீட்டு அரசு அலுவலர்கள் மூலம் வழங்கி உள்ளது ஆனால் எட்டுமாத காலம் ஆகியும் பணம் கட்டியவர்களுக்கு மானிய விலையில் வழங்க வேண்டிய அம்மா சிமிண்ட் இதனால் வரை வழங்கப்பட வில்லை என பொதுமக்களிடமிருந்து புகார் வந்தவண்ணம் உள்ளது ஆகவே அரசு ஏழை மக்களின் நலன் கருதி உடனடியாக ஏழை மக்களிடம் வாங்கிய பணத்திற்க்கு அம்மா சிமிண்டை உடனடியாக வழங்க வேண்டுகிறோம். மேலும் காலதாமதம் ஏற்படாத வண்ணம் அரசு துரித நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்கள் நலன் கருதி விரைவில் அரசு கவன ஈர்ப்பு போராட்டாம் நடத்தப்படும் என எம்.ஜி.ஆர் மக்கள் கட்சியின் மாநில தலைவர் மேஜர் ரவிக்குமார் அறிவித்துள்ளார்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் A.கோவிந்தராஜ்.
No comments:
Post a Comment