ஈரோடு மாவட்டம் பவானி அருகே துணி குடோனில் எதிர்பாராமல் தீ விபத்து...
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த தாளவாய் பேட்டை ஒரிச்சேரி ஊராட்சியில் இன்று மாரிமுத்து என்பவருக்கு சொந்தமான துணி குடோனில் எதிர்பாராமல் தீ விபத்து ஏற்பட்டது அதை தொடர்ந்து குடோனில் ஏற்பட்ட தீயானது அருகில் இருந்த தென்னை மரத்திற்கும் எதிர்பாராமல் காற்று மூலம் பரவியது அக்கம்பக்கத்தினர் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தை பார்த்தவுடன் உரிமையாளர் மாரிமுத்து விற்கு தகவல் தெரிவித்தனர் இதையடுத்து அவர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார் தீயணைப்பு நிலைய அலுவலர் திரு.கா.காந்தி தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீச்சி அடித்து தீயை சுமார் 30 நிமிடங்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். தீ விபத்து ஏற்பட்ட அந்த இடம் புகை மண்டலமாக சிறிது நேரம் காணப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் பெரும் விபத்து ஏற்படாமல் தீயை அணைத்த தீயணைப்பு படை யாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
கே .மணிகண்டன்
ஈரோடு மாவட்டம் செய்தியாளர்.
No comments:
Post a Comment