உதவி செய்யும் உள்ளம் கொண்ட மனிதர்களால் உயிர்பெற்ற சதுரங்கப்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் தொட்டி..
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம் சதுரங்கப்பட்டினம் கிராமத்தில் அமைந்துள்ள அரசு வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் நெடுநாட்களாக பழுதடைந்து பராமரிப்பின்றி இருந்த சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் தொட்டியை சரி செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டி தேசிய லஞ்ச ஊழல் கண்காணிப்பு குழு சதுரங்கப்பட்டினம் உறுப்பினர்கள் சார்பாக மருத்துவ நிர்வாகத்திடம் மொபைல் வழி கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் தேசிய லஞ்ச ஊழல் கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் இச்செய்தியை தங்களுடைய வாட்ஸ்அப் மற்றும் முகநூலில் பதிவு செய்திருந்தனர். முகநூலில் பதிவு செய்யப்பட்ட பதிவை பார்த்த சதுரங்கப்பட்டினம் கிராமத்தை சார்ந்த திரு சேகர் மற்றும் திரு சம்பத் என்னும் சகோதரர்கள் தாமாக முன்வந்து இலவசமாக அந்த சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் தொட்டியை சரி செய்து தருவதாக தேசிய லஞ்ச ஊழல் கண்காணிப்பு குழுவை சேர்ந்த திரு ரஹ்மத்துல்லா விடம் கூறினார். இது தொடர்பாக ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் வட்டார மருத்துவ அலுவலர் திருமதி கவிதா அவர்களிடம் தெரிவித்தபோது தாராளமாக செய்து கொடுங்கள் எங்களால் முடிந்த உதவியை செய்கிறோம் என்று எங்களை ஊக்கப்படுத்தினார். மேலும் சதுரங்கப்பட்டினம் ஊராட்சி செயலர் திரு அருண் மொழி அவர்களும் மொபைல் வழி செய்தியை கண்டு எங்களைத் தொடர்பு கொண்டு உதவி செய்வதாக கூறினார். பிறகு திரு சம்பத் மற்றும் திரு சேகர் ஆகியோர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் தொட்டியை பிரித்து பழுது பார்த்து அதில் உள்ள இரண்டு ஸ்டார்ட்டிங் காயில் மற்றும் ஒரு பம்ப் பழுதடைந்து இருப்பதாக கூறி அனைத்தையும் சரி செய்து தற்பொழுது மக்கள் பயன்படும் வகையில் சரி செய்து கொடுத்தனர். இம்மாதிரியான குரானா சூழ்நிலையில் வேலை வாய்ப்பின்றி அனைவரும் இருக்கும் நிலையில் இலவசமாக செய்வது எவ்வாறு சாத்தியம்??? என்று தேசிய லஞ்ச ஊழல் கண்காணிப்பு குழுவை சேர்ந்த திரு ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் திரு சேகர் மற்றும் சம்பத்திடம் வினவியபோது திரு சேகர் மற்றும் சம்பத் அவர்கள் அவசர காலகட்ட நேரத்தில் ஆபத்தில் உதவுவது அரசு மருத்துவமனை மட்டுமே எந்த நேரத்திலும் எந்த பொழுதிலும் நம் உடல் நலத்தை பாதுகாப்பதில் அரசு மருத்துவமனை முழு பங்கு வகிப்பதாகவும் தனக்கு பல நேரங்களில் அவசர காலங்களில் அரசு மருத்துவமனையே அதிகம் உதவியதாக கூறினார். எனக்கு கைமாறு எதிர்பார்க்காமல் உதவி செய்த மருத்துவமனைக்கு நான் ஏதாவது செய்ய வேண்டாமா?? என்று கூறி நம்மை மெய்சிலிர்க்க வைத்து விட்டனர். இதுபோன்ற மனிதர்கள் உலகத்தில் இருப்பதினால் தான் கொஞ்சமாவது மழை பெய்கிறது போல!!! பழுதடைந்த சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் தொட்டியை சரி செய்து கொடுத்த திரு சேகர், திரு சம்பத் அவர்களுக்கும் திருக்கழுக்குன்றம் வட்டார மருத்துவ அலுவலர் திருமதி கவிதா அவர்களுக்கும் சதுரங்கப்பட்டினம் ஊராட்சி செயலாளர் திரு அருண்மொழி அவர்களுக்கும் தேசிய லஞ்ச ஊழல் கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் சார்பாகவும் சதுரங்கப்பட்டினம் பொதுமக்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
அ. ரஹ்மதுல்லாஹ், தேசிய லஞ்ச ஊழல் கண்காணிப்பு குழு மற்றும் மக்கள் உரிமை இயக்கம் சதுரங்கப்பட்டினம்.
No comments:
Post a Comment