தென்காசி: தேவிபட்டணத்தில் தினமும் 2 மணி நேரம் 4 கடைகள் மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தொகுதி தேவிபட்டணத்தில் தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரை 2 மணி நேரம் மட்டும் இரண்டு பெட்டி கடைகள், இரண்டு மளிகை கடைகள் மட்டும் திறக்கலாம் என தாசில்தார்தலைமையில் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தென்காசி மாவட்டம் சிவகிரி அருகேயுள்ள தேவிபட்டணத்தில் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் கடந்த 46 நாட்களாக தேவிபட்டணம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து வெளியில் யாரும் செல்வதற்கும், வெளியில் இருந்து அங்கு யாரும் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேவிபட்டணம் செல்லும் சாலைகள் மற்றும் முக்கிய வீதிகள் கம்புகள் கட்டி தடுப்பு அமைக்கப்பட்டு காவல்துறையினர், சுகாதராத்துறையினர், வருவாய்த்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.கடந்த ஒன்றரை மாதத்திற்கும் மேலாக மக்கள் வீட்டிலேயே முங்கி இருவ்பதால் அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். இப்பகுதியில் உள்ள கடைகளை திறக்க வேண்டும் என்றும், விவசாய பணிகளுக்கு செல்வோரை அனுமதிகக வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் சிவகிரி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ஆனந்த் தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வாசுதேவநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரா, சிவகிரிகாவல ஆய்வாளர் சுரேஷ்குமார், டாக்டர் தினேஷ், துணை தாசில்தார் மைதீன் பட்டாணி, பஞ்., எஎழுத்தர் ராமராஜ், தேவிபட்டணம் முக்கிய பிரமுகர் சிங்காரவேலு, அனைத்துசமுதாய பிரமுகர்கள், வியாபாரிகள் சங்கத்தினர்,, விவசாய சங்க பிரதிநிதிகள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரை இரண்டு மணி நேரம் மட்டுமே இரண்டு பெட்டிக்கடைகள், இரண்டு மளிகைக் கடைகள் திறக்க அனுமதிக்கப்படும் என்றும், யார் கடைகள் திறக்கப்பட வேண்டும் என்பதனை வியாபாரிகளே முடிவு எடுக்க வேண்டும் என்றும், விவசாயத்திற்கு செல்லும் விவசாயிகள், தொழிலாளர்களை அனுமதிக்கப்படுவர் என்றும், தேவிபட்டணத்தில் 170 பேர்களுக்கு கொரோனாபரிசோதனை செய்யப்பட வேண்டும் என்றும், அவ்வாறு பரிசோதனை செய்யப்பட்டால் பொது பாதைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
தென்காசி மாவட்ட செய்தியாளர் A.கோவிந்தராஜ்.
No comments:
Post a Comment