முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை ஈரோடு மாவட்டத்திற்கு வருகை...
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகிற 17.07.2020 அன்று ஈரோடு மாவட்டத்தில் முடிவற்று பணிகளை திறந்து வைத்து புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதையடுத்து பள்ளிக்கல்வி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பட்டு துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் ஆகியோர் இன்று (16.07.2020) நடைபெற்றுவரும் முன்னேற்பாட்டு பணிகளை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள். அப்போது சட்டமன்ற உறுப்பினர்கள் இராமலிங்கம்( ஈரோடு மேற்கு), தென்னரசு (ஈரோடு கிழக்கு) உட்பட்ட பலர் பங்கேற்றனர்.
கே. மணிகண்டன்
ஈரோடு மாவட்ட செய்தியாளர்.
No comments:
Post a Comment