கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு பிரதிநிகளுடன் கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை குறித்து கலந்தாய்வு கூட்டம்

கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு பிரதிநிகளுடன் கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை குறித்து கலந்தாய்வு கூட்டம்...


கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் குடந்தை அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு பிரதிநிகளுடன் கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை குறித்து கலந்தாய்வு கூட்டம் கோட்டாட்சியர் விஜயன் அவர்கள் தலைமையில் , கும்பகோணம் காவல் துணைக் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் ,நகராட்சி ஆணையர் லெக்ஷ்மி, வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், நகராட்சி பொறியாளர் ஜெகதீசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. அது சமயம் தொழில் ,வணிக நிறுவனங்கள் தற்போது இயங்கும் நேரத்தை குறைத்து நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு கோரப்பட்டது. நாளுக்கு நாள் பெருகி வரும்  நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டும், வணிகர்களின் வாழ்வாதார பாதிப்பு நிலையை கருத்தில் கொண்டும் நேரக்குறைப்பு முடிவு ஆலோசிக்கப்பட்டது.அதன்படி  காலை 06-00 மணி முதல் மாலை 04-00 மணி வரை அனைத்து தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் இயங்குவதற்கான நேரமாக முடிவு செய்யப்பட்டது, இந்த நடைமுறை  வருகின்ற 20-07-2020 ,திங்கட்கிழமை முதல்  கடைபிடிக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது, மேலும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள நோய்த்தொற்று முன்னெச்சரிக்கை விதிமுறைகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது, இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால் ஒரு கடையில் மூன்று நபர்களுக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டால் 07 நாட்கள் வணிக முடக்கமும் , மூன்று நபர்களுக்கு மேல் இருந்தால் 15 நாட்களுக்கு வணிக முடக்கமும் அமல்படுத்த படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.ஆகையால் விழிப்புணர்வுடன் இருத்தல் அவசியம். அனைவரும் விதிமுறைகளை முழுமையாக கடைபிடித்தால் பொது ஊரடங்கு அவசியம் ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டது.இக்கூட்டத்தில் குடந்தை அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு செயலாளர் வி.சத்தியநாராயணன் , ஜவுளி வியாபாரிகள் சங்க தலைவர் ஜிர்ஜிஸ் ,நுகர் பொருள் விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் வேதம்  முரளி , மோட்டார் உதிரி பாகங்கள் விற்பனையாளர்கள் சங்க தலைவர் கண்ணன் ,உச்சிப் பிள்ளையார் கோவில் பகுதி வியாபாரிகள் சங்க தலைவர் கணேசன் ,ஹோட்டல்கள் சங்க பொருளாளர் ரமேஷ்ராஜா ,நகை வியாபாரிகள் நலச் சங்க பொருளாளர் வெங்கடேஷ் , வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பிரதிநிதி கியாசுதீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


 


வி.சத்தி 9080267574,


J ஆதவன் ஷிவாஜி,


தலைமை நிருபர்.


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...