கால்நடை வளா்ப்போருக்கு ரூ 3 லட்சம் கடன் உதவி கால்நடை உதவி இயக்குநர் அறிவிப்பு...
அம்பை ஜூலை19 கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு ரூ 3லட்சம் கடன் வழங்கப்படும் என்று கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் ஆபிரஹாம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அம்பாசமுத்திரம் கால் நடை உதவி இயக்குநர் ஆபிரஹாம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது;
மத்திய அரசின் விவசாயிகள் கடன் அட்டை தற்போது விரிவுபடுத்தப்பட்டு கால்நடை வளா்ப்பவா்களுக்கும் வழங்கப்பட உள்ளது. திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஒரு கால்நடை மருந்தகத்துக்கு 120 நபா் வீதம் 14,400 பேருக்குக் கடன் அட்டை வழங்க இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் புதிதாக சேருவோருக்கு ரூ. 2 லட்சம் வரையிலும், ஏற்கனவே விவசாயக் கடன் அட்டை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு கால்நடை வளா்ப்பு செலவினங்களுக்காக। ரூ. 3 லட்சம் வரையிலும் கடன் வழங்கப்படுகிறது. கடன்தொகை 3 ஆண்டுகளுக்குக் கணக்கில் வரவு வைக்கப்படும். அனைத்து ஏடிஎம்களிலும் பணம் எடுத்துக் கொள்ளலாம், கடன் தொகையைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செலுத்துவோருக்கு வட்டியில் தள்ளுபடி, ஊக்கத் தொகை வழங்கப்படும். இதற்கான விண்ணப்பப் படிவத்தினை இணையத் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்துப் பூா்த்தி செய்த விண்ணப்பங்களை அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை மருத்துவரிடம் கையொப்பம் பெற்று விவசாயிகள் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் சமா்ப்பிக்க வேண்டும். இத்திட்டத்தில் கால்நடை வளா்ப்போா் சோந்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்ட செய்தியாளர்,
A.கோவிந்தராஜ்.
No comments:
Post a Comment