சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் இடமாற்றமா பொது மக்கள் அச்சம்

சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் இடமாற்றமா பொது மக்கள் அச்சம்...



தென்காசி-ஜூலை-19 சங்கரன்கோவில் நகரில் கடந்த சுமார் 30 ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வந்த நகர, கிராமபுற மருத்துவ சேவை அலுவலகம் தென்காசிக்கு மாற்றப்படுவதாக பொது மக்கள் மத்தியிலும்,அரசு துறை சார்பிலும் பரவலாக பேசப்படுகிறது. சங்கரன்கோவில் தென்காசி மாவட்டத்தில் மைய பகுதி ஆகும். பொதுவாகவே சங்கரன்கோவில் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என  பொது மக்களிடம் இருந்து அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு ஒரு நாள் முழுக்கடை அடைப்பும் செய்ப்பட்டது என்பதை அரசு அறியும். இது குறித்து சுகாதார பணிகள் துணை இயக்குநர் அலுவலக கம் தென்காசிக்கு மாற்றுவதை திமுக வண்மையாக கண்டிக்கிறது எனவும் தமிழக அரசு இடமாற்றம் செய்தால் மிக பெரிய போரட்டம் .தி.மு.க நடத்தும் என முன்னாள் அமைச்சர் அறிவித்தும் உள்ளார்.   கடந்த காலத்தில் திருநெல்வேலி  மாவட்டமாக இருக்கும் போது சங்கரன்கோவில் துணை இயக்குனர் அலுவலகம் மாற்றபடவேண்டும் என அறிவிக்காதது ஏன்? என பொது மக்கள் கேள்வி மேல் கேள்வி எழுப்புகிறார்கள். எனவே பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் , வியாபாரிகளும், பத்திரிக்கை நன்பர்களும் நகர, கிராம மக்களும்  சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் சங்கரன்கோவில் நகரிலேயே செயல்பட வேண்டும் என  விரும்புகிறார்கள்.


 


தென்காசி மாவட்ட செய்தியாளர் A.கோவிந்தராஜ்.


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...