மகளிருக்கு முன்னுரிமை கொடுத்த திண்டுக்கல் மாவட்டம்

மகளிருக்கு முன்னுரிமை கொடுத்த திண்டுக்கல் மாவட்டம்..



திண்டுக்கல் செய்தி   மகளிருக்கு முன்னுரிமை கொடுத்த திண்டுக்கல் மாவட்டம்  திண்டுக்கல் மாவட்டம் மொத்தம் பத்து தாலுகாக்கள் உடையது அதில் சுமார் 17 இலட்சத்திற்கும் மேல் மக்கள் தொகை கொண்ட மாவட்டம் இம்மாவட்டத்தில் தான் சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் கொடைக்கானல் ஆறுபடை வீடுகளில் மூன்றான பழனி தமிழகத்திலேயே இரண்டாவது காய்கறி பெரிய சந்தை ஒட்டன்சத்திரம் சந்தை .மருத்துவ குணம் கொண்ட வாழைப்பழத்திற்கு பெயர்போன சிறுமலை மற்றும் அதிக கிராமங்கள் உள்ள மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம். தற்போது  மாவட்டத்தில்  பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள ஒரே மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம் என பெயர் வாங்கியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாவட்ட அலுவலர்களும் தற்போது பெண்களாக பதவி ஏற்றுள்ளனர். இது இந்தியாவின் முன்னுதாரணமாக  திகழ்வதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர் .  திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக எம் விஜயலட்சுமி ஐ.ஏ.எஸ் கடந்த ஆண்டு பதவி ஏற்றார். அதேபோல் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனராக கவிதா.மாவட்ட முதன்மை நீதிபதியாக ஜமுனா பணி புரிந்து வருகிறார்கள்.அதே போல் மாவட்ட வன அலுவலர் வித்யா  உள்ளார்கள் . மாவட்ட கோட்டாட்சியர் உஷா  உள்ளார்கள் மாவட்ட கிராம பஞ்சாயத்து இணை இயக்குனர் கங்காதரணி உட்பட பல்வேறு பதவிகளில் தற்போதுபெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் மட்டும் ஆணாக இருந்த சூழ்நிலையில் தற்போது சென்னை மாதவரத்தில் இருந்து திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக ரவளிபிரியா ஐ பி எஸ் இன்று பொறுப்பேற்றார் இதன் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாவட்ட நிர்வாகத்திலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.  இந்தியாவிலேயே மாவட்டத்திலுள்ள அனைத்து முக்கிய பதவிகளும் பெண்கள் உள்ள ஒரே மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம் என்று பெயர் வாங்கி உள்ளது.


 


ரோசாரியோ


பொறுப்பாசிரியர், திண்டுக்கல்.


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...