ஈரோடு மாவட்டம் முழு ஊரடங்கு மீறும் நபர்கள் தனிமை படுத்துவார்கள் என மாவட்ட ஆட்சியர் கதிரவன் எச்சரிக்கை..
ஈரோடு மாவட்டம் முழு ஊரடங்கு மீறும் நபர்கள் தனிமை படுத்துவார்கள் என மாவட்ட ஆட்சியர் கதிரவன் அவர்கள் எச்சரிக்கை எடுத்துள்ளார். முழு ஊரடங்கு நாட்களில் கடைகளை திறந்து வைத்திருப்பவர்கள் மீதும் அவசியம் தேவையின்றி வேலையில் வருபவர்கள் மீதும் தொற்றுநோய் தடுப்பு சட்டம் 1897 பிரிவு-2ன்படி காவல்துறையின் மூலம் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படுவதோடு அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் கதிரவன் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி கொரோனா வைரஸ் நோய் தோற்றுப ரவாமல் தடுக்கும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு மாவட்டத்தில்.5.12.19. மற்றும் 26 ஆகிய நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். இந்த முழு ஊரடங்கு நாட்களில் ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளும் உள்ள சிறு கடைகள் முதல் பெரும் கடைகள் மளிகைக் கடைகள் உணவகங்கள் தேனீர் கடைகள் உள்பட்ட அனைத்து வகையான கடைகளும் காய்கறி சந்தைகள் இறைச்சிக் கடைகள் வாகனம் போக்குவரத்துக்கள் மூடப்பட வேண்டும்.
மணிகண்டன் நிருபர் ஈரோடு.
No comments:
Post a Comment