தொடர்மழை எதிரொலி; குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு..
தென்காசி: தொடர்மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மிதமான மழையால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ஜூன், ஜூலை,ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களும் சீசன் காலங்களாகும். இந்த சீசன் காலகட்டங்களில் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து ஆர்ப்பரித்து கொட்டும். சுற்றுலா பயணிகள் வருகை என்பதும் அதிகமாகவே காணப்படும்.அதே போன்று இந்த ஆண்டும் சீசன் துவங்கியுள்ளது. இந்த ஆண்டு சீசன் தாமதமாக துவங்கிய நிலையில், தற்போது தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. குற்றாலம் பேரருவியில் அதிகாலை முதலே தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தற்போது தமிழக அரசு அறிவித்தபடி சுற்றுலா தளங்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லாததால் குற்றால அருவிக்கரை வெறிச்சோடி காணப்படுகிறது.
தென்காசி மாவட்ட செய்தியாளர்
A. கோவிந்தராஜ்
No comments:
Post a Comment