கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி வடக்கூர் பகுதியில் காட்டு பன்றிக்காக வைக்கப்பட்ட வெடியினை கடித்ததில் மான் வாய் பகுதி சிதறியது

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி வடக்கூர் பகுதியில் காட்டு பன்றிக்காக வைக்கப்பட்ட வெடியினை கடித்ததில் மான் வாய் பகுதி சிதறியது..


கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி வடக்கூர் பகுதியில் மான் காட்டு பன்றிக்காக வைக்கப்பட்ட வெடியினை கடித்ததில் வாய் பகுதி சிதறியது. இந்நிலையில் பொய்கை அணையில் இருந்து தண்ணீர் வருகின்ற பொய்கை ஓடையில் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளது.


இது பற்றி வனசரக அலுவலகத்திற்கு அப்பகுதி வழியாக சென்றவர்கள் தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் பூதப்பாண்டி வனசரகர் திலிபன், தலைமையில் வனவர் சக்திவேல், வன ஊழியர் துரைராஜ், வேட்டை தடுப்பு காவலர் ஜெகன், சபரி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மானை சோதனை செய்தபோது அது இறந்தது தெரிய வந்தது.


உடனே மான் ஆரல்வாய்மொழி வன அலுவலகத்திற்கு கொண்டு வந்து கால்நடை உதவி மருத்துவர் கிறிஸ்டோபால் ராய் தகவல் தைரிவிக்கப்பட்டது. பின்னர் மான் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வன அலுவலக வளாகத்தில் புதைக்கப்பட்டது.


மேலும் வெடி வைத்தது யார் என்று விசாரனை நடத்தப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.


J C B சரவணன் பொறுப்பாசிரியர்.


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...